இதை நான் செய்யலாமா வேண்டாமான்னு கேட்கும் சித்தார்த்: நீங்களே பதில் சொல்லுங்க மக்களே
சென்னை: இந்தியில் சூப்பர் ஹிட்டான அந்தாதுன் படத்தை தமிழில் ரீமேக் செய்ய சித்தார்த்துக்கு ஆயுஷ்மான் குரானா அனுமதி அளித்துள்ளார்.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்த அந்தாதுன் இந்தி படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அக்டோபர் மாதம் வெளியான இந்த படத்தை பார்த்து பாராட்டாதவர்களே இல்லை.
இந்நிலையில் அந்தாதுன் படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார் சித்தார்த்.
ரீமேக்
நான் அந்தாதுன் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று எத்தனை பேர் விரும்புகிறீர்கள்? என்று சித்தார்த் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.
ஆயுஷ்மான்
சித்தார்த்தின் ட்வீட்டை பார்த்த அந்தாதுன் ஹீரோ ஆயுஷ்மான் குரானாவோ, ரீமேக் செய் மச்சான் என்று பதில் அளித்துள்ளார்.
சிம்ரன்
தாராளமாக ரீமேக் செய்யுங்கள், தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்தால் எப்படி இருக்கும் என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் ரசிகர்கள்
ரீமேக் செய்ய வேண்டாம். தமிழ் ரசிகர்களின் டேஸ்டுக்கு ஒத்து வராது என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











