Messi: இந்தியா வந்த மெஸ்ஸி.. மகனுடன் முதல் ஆளாக போய் பார்த்த ஷாருக்கான்.. ரசிகர்கள் தான் அப்செட்!

கொல்கத்தா: கால்பந்து மற்றும் பாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் கொண்டாட்டமாக இன்றைய தினம் மாறியுள்ளது. கொல்கத்தாவில் நடந்து வரும் GOAT இந்திய சுற்றுப்பயணத்தின்போது இரண்டு உலகப் பிரபலங்களான ஷாருக்கான் மற்றும் லியோனல் மெஸ்ஸி சந்தித்துக்கொண்டனர். சனிக்கிழமை (டிசம்பர் 13) அன்று சால்ட் லேக் மைதானத்தில் நடந்த இந்தச் சந்திப்பு, சமூக வலைத்தளங்களில் பெரும் அலையை ஏற்படுத்தியது.

நடிகர் ஷாருக்கான் தனது இளைய மகன் அப்ராமுடன் மெஸ்ஸியை உற்சாகமாக வரவேற்றார். இந்தத் தருணம் நிகழ்வின் முக்கியப் பேசுபொருளாக மாறியது. காணொளியில், ஷாருக் புன்னகையுடன் மெஸ்ஸியுடன் கைகுலுக்க, மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணியின் சக வீரர்களான லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் மேடையில் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

GOAT Messi Shah Rukh Khan and his son Abrahm met Football legend at Kolkata
Photo Credit:

மெஸ்ஸியின் இந்த வருகை, டிசம்பர் 13, 2025 அன்று சால்ட் லேக் மைதானத்தில் காணொளி வாயிலாக திறக்கப்படவுள்ள 70 அடி உயர சிலைக்கு முன்னதாக நிகழ்ந்தது. இது GOAT இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகும். மேற்கு வங்க அமைச்சர் சுஜித் போஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்ற இந்த விழா, சமீப ஆண்டுகளில் கொல்கத்தா கண்ட மிகப்பெரிய விளையாட்டு கொண்டாட்டங்களில் ஒன்றாகும்.

அப்ராம், கால்பந்து ஜாம்பவானைச் சந்தித்த ஆனந்தத்தில் அருகில் நின்று, மெஸ்ஸியிடம் ஆட்டோகிராஃப் பெற்றுக்கொண்டார். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தருணத்தை ரசிகர்கள் "நெகிழ்ச்சியானது" மற்றும் "வரலாற்றுச் சிறப்புமிக்கது" என்று வர்ணித்தனர். சமூக வலைத்தளங்களில் இந்தச் சந்திப்பை "வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பு" என்றும் கொண்டாடினர்.

ஷாருக்கான் அப்ராமுடன் கொல்கத்தா வந்தடைந்தார். சாம்பல் நிற ஹூடி, சாதாராண கால்சட்டை, கருப்பு தொப்பியுடன் எளிய தோற்றத்தில் அவர் இருந்தார். அப்ராம் கருப்பு ட்ராக் சூட்டில் காணப்பட்டார். டிசம்பர் 11 அன்று தனது எக்ஸ் (X) பதிவில், 'டிசம்பர் 13 மெஸ்ஸிக்கான நாளாக அமையும்' என்று குறிப்பிட்டு, இந்தச் சந்திப்பு குறித்த எதிர்பார்ப்பை ஷாருக் முன்னரே ஏற்படுத்தியிருந்தார்.

2011ஆம் ஆண்டில் அர்ஜென்டினா அணிக்காக வெனிசுலாவுக்கு எதிராக இதே மைதானத்தில் விளையாடிய பிறகு, மெஸ்ஸி இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை. சனிக்கிழமை அதிகாலையில் கொல்கத்தா வந்தடைந்த அவரை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இந்தத் தந்தை-மகன் ஜோடி மெஸ்ஸியைச் சந்திக்கும் காட்சிகள் வெளியானதும், அவர்களின் வருகை குறித்த ஆர்வம் வேறலெவலுக்கு சென்றது.

மூன்று நாள் சுற்றுப்பயணமாக மெஸ்ஸி இந்தியா வந்துள்ளார். கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை, புது டெல்லி என நான்கு நகரங்களுக்கு அவர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். கொஞ்சம் நேரம் தான் மெஸ்ஸி வந்தார் என்றும் 12 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டிக்கெட் வாங்கி கால் கடுக்க காத்திருந்த ரசிகர்கள் கடுப்பாகி ஸ்டேடியத்தை சேதப்படுத்திய நிகழ்வுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X