மனிதன் உருவாக்கிய சின்னங்களில் கடவுள் இல்லை! - ஷாரூக்

இதுகுறித்து தனது ட்விட்டர் பிளாக்கில் அவர் எழுதியிருப்பதாவது:
"அல்லா, கடவுள், பகவான் என எந்தப் பெயரில் நாம் இறைவனை வழிபட்டாலும், அந்த இறைவன் மனிதனின் இதயத்தில் மட்டுமே இருப்பதாக நான் நம்புகிறேன். இந்த கடவுள்களுக்காக மனிதன் உருவாக்கிய தலங்கள், சின்னங்கள் எதிலும் இறைவன் இருப்பதாக நான் நம்பவில்லை.
என்னைப் பொறுத்தவரை முதலில் கடவுள் நம்பிக்கை என்ற விதை மனிதனின் மனதுக்குள் ஆழ வேரூன்ற வேண்டும். அதன் பிறகுதான் அதை கோயிலுக்கோ மசூதிக்கோ கொண்டு செல்ல வேண்டும். ஒரு வரலாற்றுச் சின்னத்தை உருவாக்குவது எத்தனை கடினம்... அதை இடித்துத் தள்ளுவது எத்தனை சுலபம் என்பதை மக்கள் உணர வேண்டும்," என்று கூறியுள்ளார்.
ராம்ஜென்மபூமி-பாபர் மசூதி விவகாரத்தின் தீர்ப்புக்காக நாடே பரபரத்துக் கொண்டிருக்கும் சூழலில் ஷாரூக்கான் இந்தக் கருத்தைக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
More from Filmibeat
ayodhya verdict கடவுள் நம்பிக்கை பாபர் மசூதி வரலாற்றுச் சின்னம் ஷாரூக்கான் babri masjith belief monuments shahrukh khan


Click it and Unblock the Notifications











