அமரனை முந்தாத அஜித் படம்.. ரங்கநாதனை வீழ்த்தாத ரெட்ரோ.. பெரிய வசூலை குவிக்க முடியாதது ஏன்?

சென்னை: 20 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு மஞ்சுமெல் பாய்ஸ் 240 கோடி ரூபாய் வசூலை உலகளவில் கடப்பது தான் உண்மையான பாக்ஸ் ஆபீஸ் வெற்றி என்கின்றனர். மலையாளத்தில் இந்த ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் 250 கோடி ரூபாயும் தொடரும் படம் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளன.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அஜித் குமார் பேக் டு பேக் என 2 படங்களை வெளியிட்டு 100 கோடி வசூலையும் 200 கோடி வசூல் என இதுவரை அதிக வசூல் ஈட்டிய நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படத்தின் முதல் நாள் வசூலை கூட குட் பேட் அக்லி லைஃப் டைமிலேயே வசூல் செய்ய முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை என்கின்றனர்.

Good Bad Ugly and Retro Final Box Office not upto the mark for Actors like Ajith Kumar and Suriya

அதே போல பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த டிராகன் படத்தின் வசூலை கூட சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் முறியடிக்குமா என்பது சந்தேகம் தான் என்றும் கூறுகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் குமார் மற்றும் சூர்யாவால் ஏன் பெரிய வசூல் வேட்டையை நடத்த முடியவில்லை என்பது குறித்த ஒரு லேசான அலசலை இங்கே பார்க்கலாம் வாங்க..

அமரனை முந்தாத குட் பேட் அக்லி: கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. அந்த படத்தில் என்டர்டெயின்மென்ட் விஷயங்கள் அதிகமாக இல்லை என்றாலும் அந்த படத்தின் நேர்த்தியான உருவாக்கம் மற்றும் எமோஷனல் கனெக்ட் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தியேட்டருக்கு வரவழைத்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவாகி வரும் நிலையில், பலரும் மீண்டும் ஓடிடியில் குட் பேட் அக்லிக்கு பதிலாக அமரன் படத்தை அதிகம் பார்த்து வருவதாக சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Take a Poll

மசாலா நெடி ஓவர்: ரசிகர்களை திருப்திப்படுத்துகிறேன் என நல்ல கதை மற்றும் திரைக்கதை இல்லாமல் ஹாலிவுட் பட நடிகர்களின் ரெஃபரன்ஸ்களை எல்லாம் கார்ட்டூன் பொம்மைகள் போல கொண்டு வந்து அஜித் குமாரை வைத்து ஒரு மசாலா நெடி அதிகம் கொண்ட படமாக குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் கிண்டி கொடுத்த நிலையில், அவரது ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களை தாண்டி பெரிதாக மற்ற இடங்களில் குட் பேட் அக்லி ஓடாத நிலையில் தான் அதிகபட்சமாக 240 கோடி ரூபாய் வரை அந்த படம் வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Good Bad Ugly and Retro Final Box Office not upto the mark for Actors like Ajith Kumar and Suriya

டிராகன் vs ரெட்ரோ: உலகளவில் ரெட்ரோ திரைப்படம் 104 கோடி வசூல் ஈட்டியதாக முதல் வாரத்திலேயே அறிவித்து வெற்றி விழாவையும் சூர்யா கொண்டாடி விட்டார். இதுவரை இந்தியாவில் வெறும் 53 கோடி ரூபாய் தான் அந்த படம் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் 150 கோடி வரை வசூல் ஈட்டியதாக கூறப்படும் நிலையில், சூர்யாவின் ரெட்ரோ 150 கோடி வசூலை கடக்குமா? என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர். இந்த வாரம் 9 சின்ன படங்கள் வெளியாகி உள்ள நிலையில், 2ம் வாரத்தில் ரெட்ரோ வசூல் பெரிதாக அதிகரிக்க வாய்ப்பில்லை என்கின்றனர்.

அஜித், சூர்யா நிலைமை: ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன் உள்ளிட்டோர் தமிழ் சினிமாவில் இண்டஸ்ட்ரி ஹிட் படங்களை கொடுத்துள்ள நிலையில், அஜித் மற்றும் சூர்யாவில் பெரிய அளவிலான வசூல் வேட்டையை சாத்தியப்படுத்த முடியாமல் போக காரணமே அவர்கள் தேர்வு செய்யும் இயக்குநர்கள் தான் என்கின்றனர். பாக்ஸ் ஆபீஸ் படங்களை கொடுக்கும் இயக்குநர்களுடன் இணைந்து இவர்கள் நடித்தால் நிச்சயம் வசூல் சாதனை படைப்பார்கள் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X