வொர்த்தான வெயிட்டிங்கா இருக்கும் மாமே.. குட் பேட் அக்லி இங்கிலாந்து சென்சார் ரிசல்ட் என்ன தெரியுமா?
சென்னை: விடாமுயற்சி படத்தை பார்த்துவிட்டு அஜித் குமாரையே திட்டத் தொடங்கிய ரசிகர்களுக்கு உண்மையாகவே இருங்க பாய் என குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர் மற்றும் செகண்ட் சிங்கிள் வந்து கூஸ்பம்ப்ஸ் கொடுத்து மீண்டும் ஏகேவை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாட வைத்துவிட்டார் ஆதிக் ரவிச்சந்திரன்.
த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா என அவர் இயக்கிய படங்கள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை என்றாலும், அஜித்துக்கு அவர் மீதிருந்த நம்பிக்கை காரணமாக குட் பேட் அக்லி படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்துள்ளார்.

மார்க் அண்டனி படம் 100 கோடி வசூல் வேட்டை நடத்திய நிலையில், குட் பேட அக்லி 500 கோடி வரை வசூல் அடிக்கும் என்கிற உறுதியுடன் அஜித் ரசிகர்கள் காத்திருக்க, இங்கிலாந்தில் படத்தை பார்த்த சென்சார் குழு பாராட்டியுள்ளதாக அந்த படத்தின் யுகே ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள அஹிம்சா நிறுவனம் தற்போது ட்வீட் போட்டு ரசிகர்க்ளை குஷியாக்கியுள்ளது.
ஓஜி சம்பவம் பார்க்க ரெடியா?: கேங்ஸ்டர்களுக்கெல்லாம் கேங்ஸ்டர் ஒரிஜினல் கேங்ஸ்டராக அஜித் குமார் குட் பேட் அக்லி படத்தில் வர காத்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் தீனா, பில்லா, மங்காத்தா அஜித்தை எல்லாம் ஆதிக் ரவிச்சந்திரன் கொண்டு வந்து வெறித்தனமான சம்பவத்தை செய்யப் போவது டீசரிலேயே தெரிந்த நிலையில், இன்று வெளியாகவுள்ள டிரைலரை பார்க்க ரசிகர்கள் தவமாய் தவம் கிடந்து காத்திருக்கின்றனர். டிரைலர் ரெடியானதுமே அதன் ரிலீஸ் டைமிங்கை அறிவித்து இன்று இரவுக்குள் படக்குழு வெளியிடும் என தெரிகிறது.
டிக்கெட் புக்கிங் தெறிக்கப்போகுது: இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களிலேயே மத கஜ ராஜா, குடும்பஸ்தன், டிராகன், வீர தீர சூரன் உள்ளிட்ட படங்கள் தான் ரசிகர்களை கவர்ந்து தியேட்டரில் வசூல் வேட்டை நடத்தியது. அதில், அதிகபட்சமாகவே டிராகன் படம் 150 கோடி ரூபாய் வசூலை அடைந்த நிலையில், குட் பேட் அக்லி முதல் 3 நாட்களிலேயே டிராகன் வசூலை முறியடித்து விடாமுயற்சி படத்துக்கு நடந்ததை சரி செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து சென்சார் ரிசல்ட்: அஜித் குமார், த்ரிஷா, பிரசன்னா, சுனில் மற்றும் அர்ஜுன் தாஸ் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தினை சென்சார் செய்த இங்கிலாந்து தணிக்குழுவினர் படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்திருப்பதாக அஹிம்சா என்டர்டெயின்மென்ட் தற்போது ட்விட்டரிலேயே பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது போல எமோஜிக்களை போட்டு அஜித் ரசிகர்களை ஆனந்தக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
டிரைலரில் தரமான சம்பவம்: டீசரில் பார்த்ததை விட குட் பேட் அக்லி படத்தின் உண்மையான முகத்தை ரசிகர்கள் டிரைலரில் தான் காணப் போகின்றனர் என்கின்றனர். மாஸ் மசாலா படமாக மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய அளவுக்கு எமோஷனல் கனெக்ட் கொண்ட கமர்ஷியல் படமாக குட் பேட் அக்லி தரமான சம்பவத்தை செய்யும் என்கின்றனர். டிரைலரை பார்த்தாலே ரசிகர்கள் டிக்கெட் புக்கிங் சர்வர்களை கிராஷ் செய்யாமல் விடமாட்டார்கள் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











