Ajithkumar: அஜித் குறித்து தரமான போஸ்ட்.. குட் பேட் அக்லி அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்!
சென்னை: அஜித்குமார் நடிப்பில் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள படங்களில் ஒன்று குட் பேட் அக்லி. மைத்ரீ மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கி, இந்த ஆண்டே முடிந்தும் விட்டது. படத்தினை தொடங்கும்போதே, 2025ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு பணிகளைத் தொடங்கினர். ஆனால் பொங்கலுக்கு அஜித்தின் மற்றொரு படமான விடாமுயற்சி ரிலீஸ் ஆகவுள்ளதால், குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
பொங்கலுக்கு வரவேண்டிய குட் பேட் அக்லி படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. மேலும், படப்பிடிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்ற கேள்வியும் எழுந்தது. இப்படியான நிலையில் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படப்பிடிப்புத் தளத்தில், அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வீடியோவையும் பகிர்ந்து அஜித்துக்கு நன்றி தெரிவித்திருந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்த புகைப்படத்தில், அஜித், அவர் நடித்த தீனா படத்தில் இருந்ததைப்போல் காஸ்ட்யூம் அணிந்து செம மாஸாகவும், லவ்லியாகவும் காணப்பட்டார்.

விடாமுயற்சி படத்தில் இருக்கும் ஒரு பாடலுக்கும் அதே லுக்கில்தான் அதாவது உடல் எடையைக் குறைத்த லுக்கில்தான் நடித்துள்ளார். விடாமுயற்சி படத்தின் ஸ்வதீகா பாடல் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு ஈர்ப்பினை ஈர்த்துள்ளது. மேலும் இந்தப் பாடல் மலையாளப் படமான ஆவேசம் படத்தில் இடம் பெற்ற இல்லுமினாட்டி பாடலின் ட்யூனைப்போல் இருப்பதாகவும் இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஆதிக்: மேலும் ஆதிக் குட் பேட் அக்லி படப்பிடிப்பு முடிந்த தினத்தில்தால் புகைப்படங்களைப் பகிர்ந்தார். அப்போது அந்த பதிவில், "எனது வாழ்நாளில் எனக்கு இப்படியொரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த அஜித் சாருக்கு நன்றி. கனவு நிறைவேறிவிட்டது. லவ் யூ சோ மச் சார். குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த ஒட்டுமொத்த பயணமும் இனிமையாக இருந்தது" என பதிவிட்டிருந்தார்.

டப்பிங்: தற்போது படத்தின் டப்பிங் பணிகளும் முடிந்துவிட்டதால் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுக்க அஜித்துடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஆதிக் ரவிச்சந்திரன் அதனுடன் எழுதியுள்ள தகவல் பலரையும் கவர்ந்துள்ளது. அதாவது, "ஒவ்வொரு ஆண்டும் அஜித் சாரின் குரலை திரையரங்கில் கேட்பதற்காக காத்திருப்பேன். ஆனால், இப்போது அஜித் சார், கடவுள் மற்றும் இந்த பிரபஞ்சமே இணைந்து அவருடன் பணியாற்றவும், அவர் டப் செய்வதை அருகிலேயே இருந்து என்னைக் கேட்கவும் வைத்துவிட்டன. இந்த ஆண்டு, குட் பேட் அக்லி என்ற அற்புதமான பயணத்துடன் தொடங்கி, முடிந்துவிட்டது. இந்த நினைவுகளை எப்போதும் என் மனதில் பொக்கிஷமாக வைத்துக்கொள்வேன்.

கடமை: உங்களுக்கு என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளேன் சார்" என பதிவிட்டுள்ளார். குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதுமட்டும் இல்லாமல், அஜித் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ள கருத்துக்கள் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி அடையச்செய்துள்ளது.



Click it and Unblock the Notifications











