»   »  'கலாபவன்' படம் 'கலகல' ஓட்டம்!

'கலாபவன்' படம் 'கலகல' ஓட்டம்!

Subscribe to Oneindia Tamil

மலையாள சூப்பர் ஸ்டார்களின் ஓணம் ரிலீஸ் படங்கள் சிறப்பாக ஓடாத நிலையில், 2ம் நிலை ஹீரேவான கலாபவன் மணியின் இந்திரஜித்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

கேரளாவில் ஓணத்தையொட்டி மோகன்லால் உள்ளிட்டோரின் படங்கள் திரைக்கு வந்தன. ஆனால் எல்லாப் படங்களின் வசூலுமே திருப்திகரமாக இல்லையாம். இதனால் மலையாளத் தயாரிப்பாளர்கள் சோகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கலாபவன் மணியின் இந்திரஜித் வெளியானது. கலாபவன் மணி, சாதாரண காமெடியனாக இருந்து, பின்னர் தமிழ் மூலம் வில்லனாக மாறி, இப்போது மலையாளத்தில் ஹீரோவாகவும் இருக்கிறார்.

இவருடைய இந்திரஜித் படத்துக்கு கேரளா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளாம். ஓணத்திற்குப் பின்னர் வெளியான படம் இது. 30 மையஙக்ளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக திரையிட்ட இடமெல்லாம் நல்ல வசூலாம். இதனால் படத்தின் தயாரிப்பாளரும், படத்தை வாங்கிய விநியோகஸ்தரும், வாங்கி வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்களும் சந்தோஷமாகியுள்ளனராம்.

ஓணத்திற்கே இப்படம் திரைக்கு வந்திருக்க வேண்டியது. ஆனால் தியேட்டர் கிடைக்காததால், ஓணத்திற்குப் பிறகு ரிலீஸ் செய்தனர்.

ஓணம் படங்களெல்லாம் ஓடாத சோகத்தில் இருந்த மலையாளத் திரையுலகினருக்கு இந்திரஜித்தின் வெற்றி பரவசத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

ஹரிதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். கலாபவன் மணியின் கலக்கல் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருப்பது ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் மலையாள ரசிகர்களின் நாடி தெரிந்தவர்கள்.

Read more about: kalabhavanmani

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil