நல்ல வேளை ஆர்வக்கோளாறில் தனுஷ் அப்படி பண்ணல
Recommended Video

சென்னை: நல்ல வேளை தனுஷ் தனக்கு தோன்றியபடி செய்யவில்லை.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள மாரி 2 படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. மாரியை போன்றே இரண்டாம் பாகமும் செம ஜாலியாக இருக்கும் என்று தனுஷ் வாக்குறுதி அளித்துள்ளார்.
அவர் தனது படத்தை விளம்பரப்படுத்துவதில் கில்லாடி என்பது அனைவருக்கும் தெரியும்.

தனுஷ்
எந்த கவலையும், விதிமுறையும் இல்லாமல் ஜாலியாக வாழும் மாரி தான் நினைத்ததை எல்லாம் செய்பவன். இந்நிலையில் மாரி கெட்டப்பில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு வந்து மனதில் பட்டதை எல்லாம் பேச நினைத்திருக்கிறார் தனுஷ். அதன் பிறகு சர்ச்சை வேண்டாமே என்று நினைத்து அந்த ஐடியாவை கைவிட்டுவிட்டார்.

வில்லங்கம்
தனுஷ் மாரியாக மாறி செய்தியாளர்கள் சந்திப்புக்கு வராததும் ஒரு வகையில் நல்லது தான். அவர் பாட்டுக்கு மனதில் பட்டதை எல்லாம் பேசியிருந்தால் படத்தை விட்டுவிட்டு அவர் கூறியதை பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருப்பார்கள். இதனால் படத்திற்கு விளம்பரம் கிடைத்திருக்காது.

விளம்பரம்
மாரியாக வந்திருந்தால் தனுஷ் என்ன பேசியிருப்பார் என்று மக்களாக யூகித்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு சஸ்பென்ஸாகிவிட்டது. மாரி கதாபாத்திரத்தில் நடிக்கும்போது தான் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன் என்று கூறி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டிவிட்டுவிட்டார் தனுஷ்.

பாடம்
சில பெரிய பிரபலங்கள் தங்களின் பட ரிலீஸுக்கு முன்பு தேவையில்லாத சர்ச்சையில் சிக்கியதை தனுஷ் பார்க்காமலா இருந்திருப்பார். அதனால் தான் சூதானமாக நடந்து கொண்டுள்ளார். நல்ல காரியம் செஞ்சீங்க மாரி.


Click it and Unblock the Notifications











