»   »  நிஜத்தில் கவுதமிதான் ஹீரோ... நான் துணை நடிகன்! - கமல்ஹாஸன்

நிஜத்தில் கவுதமிதான் ஹீரோ... நான் துணை நடிகன்! - கமல்ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேன்சரை எதிர்த்துப் போராடி வென்ற கவுதமிதான் நிஜ ஹீரோ.. நான் வெறும் துணை நடிகன்தான் என்றார் நடிகர் கமல் ஹாஸன்.

ஹைதராபாதில் நடந்த கேன்சர் நோய் குறித்த மாநாட்டை நடிகர் கமல் ஹாசன் தொடங்கி வைத்தார். நடிகை கவுதமியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். விழாவில் கமலஹாசன் பேசுகையில், "புற்று நோய் ரொம்ப கொடுமையானதுதான். அந்த வந்தால் நமது வாழ்க்கை அவ்வளவுதான். முடிந்து போச்சு., விரைவில் இறந்து விடுவோம்' என்று பலர் நினைக்கிறார்கள்.

Gouthami is the real Hero; I'm a Junior artist! - Kamal

இது வெறும் பயம்தான். புற்றுநோயை உடனடியாகக் கண்டு பிடித்து சரியான மருந்து சாப்பிட்டால் அந்த நோயை விரட்டி விடலாம். இதற்கு முன் உதாரணம் கவுதமிதான். புற்று நோய்க்கு அவர் பணிந்து விடவில்லை. அதை எதிர்த்து தைரியமாகப் போராடினார். இறுதியில் அதனை விரட்டினார்.

சினிமாவில்தான் நான் ஹீரோ. ஆனால் நிஜவாழ்க்கையில் கவுதமி தான் ஹீரோ. அவருக்கு முன்னால் நான் துணை நடிகர்தான். நம்பிக்கையுடன் செயல்பட்டால் புற்றுநோயை எளிதில் விரட்டி விடலாம்," என்றார்.

கவுதமி

நடிகை கவுதமி பேசுகையில், "எனக்கு கேன்சர் வந்ததை மருத்துவர்கள் யாரும் பரிசோதனை செய்து சொல்லவில்லை. நான் படித்த அறிவினால் அதனை தெரிந்து கொண்டேன்.

இதற்காக சிகிச்சைக்கு சென்றேன். முதலில் ஹீமோ தெரபி செய்தேன். மறுபடியும் கேன்சர் வந்தது. மீண்டும் சிசிச்சை எடுத்தேன். எனது தைரியத்தை மட்டும் இழக்கவில்லை. இறுதியில் கேன்சரை விரட்டினேன்.

எந்த வியாதியையும் ஒருவர் நினைத்தால் அதனை விரட்டி விட முடியும். உடலில் உயிர் இருக்கும் வரை அதனை எதிர்த்துப் போராட வேண்டும். தன்னம்பிக்கையை இழக்க கூடாது," என்றார்.

English summary
Actor Kamal Hassan says that Gouthami is the real hero in life. He narrated himself as a junior artist comparing with her.
Please Wait while comments are loading...