பிரதீப் ரங்கநாதனுக்கு 2K கிட்ஸ்தான் ரசிகர்கள்னு யார் சொன்னது?.. இங்க பாருங்க பாட்டி எவ்வளவு பெரிய ரசிகைனு
சென்னை: இயக்குநராக திரைத்துறையில் பயணத்தை தொடங்கிய பிரதீப் ரங்கநாதன் இப்போது சக்சஸ்ஃபுல் ஹீரோவாக வலம் வருகிறார். ஹீரோவாக அவர் நடித்த நான்கு படங்களில் மூன்று படங்கள் நூறு கோடி ரூபாயை அள்ளியிருக்கிறது. அவருக்கு 2கே கிட்ஸ் வெறித்தனமான ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமின்றி மூத்த தலைமுறையினரும் ரசிக்கவே செய்கிறார்கள். அதுதொடர்பான வீடியோதான் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.
கோமாளி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதில் ஒரு காட்சியிலும் தோன்றி நடித்திருந்தார். அந்தப் படத்துக்கு பிறகு லவ் டுடே படத்தை இயக்கி ஹீரோவாக நடித்தார். பிரதீப் ஹீரோவாக நடிக்கிறார் என்று தகவல் வந்தவுடனேயே, இவர் வேலைக்கு ஆகமாட்டார். கண்டிப்பாக இந்தப் படத்தோடு காணாமல் போய்விடுவார் என்று பலரும் ஆரூடம் சொன்னார்கள். ஆனால் அந்தப் படமோ மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. நூறு கோடி ரூபாய் வசூலித்து கெத்து காண்பித்தது. அது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பிரதீப்பின் முடிவு: அவரது வெற்றி லக்கினால் வந்தது என்று சிலர் கூறினார்கள். அதையெல்லாம் PR கண்டுகொள்ளவில்லை. மேலும் லவ் டுடே கொடுத்த வெற்றி உற்சாகம் அடுத்தடுத்து ஹீரோவாக நடிப்பது என்று அவரை முடிவு எடுக்க வைத்தது. அதன்படி டிராகன், ட்யூட் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே கடந்த வருடத்தில் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி 100 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. இதனால் மூன்றே படங்களில் சென்சேஷனல் ஹீரோவாக மாறினார் அவர்.
எல்ஐகே சொதப்பல்: அவரது நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு எல்ஐகே திரைப்படம் வெளியானது. விக்னேஷ் சிவன் படத்தை இயக்கியிருந்தார். இதற்கு முன்பு வந்த லவ் டுடே, டிராகன், ட்யூட் போன்று இந்தப் படமும் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலிக்கும் என அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் சுமார் என்ற ரிசல்ட்டையே பெற்றிருக்கிறது. பிரதீப்பின் நடிப்பு ரசிக்கும்படி இருந்தாலும்; விக்கியின் இயக்கம் சொதப்பியதால் படம் படுத்துவிட்டது. வசூலிலும் பெரிய ரவுண்டு எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டிப்பாக சரி செய்வார்: வரிசையாக மூன்று முறை நூறு கோடி ரூபாய் அள்ளிய பிரதீப் ரங்கநாதனுக்கு 2கே கிட்ஸ் ரசிகர்களாக மாறிவிட்டார்கள். அவரது ஒவ்வொரு ஆக்ஷனையும் அவர்கள் ரசித்து கொண்டாடுகிறார்கள். கண்டிப்பாக இன்னும் பல வருடங்களுக்கு அவர் ஹீரோவாக தொடர்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவரும் தன்னுடைய நடிப்பை ஒவ்வொரு படத்துக்கும் மெருகேற்றிவருவதோடு மட்டுமில்லாமல் வித்தியாசமாக கொடுப்பதற்கும் முயல்கிறார். ஆனால் அவரது நடிப்பில் தனுஷ் சாயல் தெரிகிறது என்பது உண்மைதான். அதை போகப்போக சரி செய்துவிடுவார் என்று கண்டிப்பாக நம்பலாம்.
ரசிகையான பாட்டி: இதற்கிடையே பிரதீப்பை 2கே கிட்ஸ் மட்டும்தான் ரசிக்கிறார்கள் என்ற கருத்து பலமாக இருக்கிறது. இந்நிலையில் பிரதீப்பை அவர்கள் மட்டுமில்லை மூத்த தலைமுறையினரும் ரசிக்கத்தான் செய்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும்படியான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அதாவது சமீபத்தில் வெளியான எல்ஐகே படத்தை பார்த்துவிட்டு பிரதீப் காரில் புறப்பட்டார். அப்போது பாட்டி ஒருவர் வந்து, 'படம் சூப்பராக இருக்கிறது' என சொல்லி பிரதீப் ரங்கநாதன் கன்னத்தை தடவி கொஞ்சினார். மேலும் அந்த பாட்டியின் மொபைல் ஃபோனை வாங்கி தானே செல்ஃபியும் எடுத்தார் பிரதீப். இதை பார்த்த PR ரசிகர்கள், எங்கள் பிரதீப் மூத்த தலைமுறையினரையும் பிடித்துவிட்டார் என்று மகிழ்ச்சியோடு கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications















