»   »  ட்விட்டரில் சூர்யா யாரை பின்தொடர்கிறார் தெரியுமா?

ட்விட்டரில் சூர்யா யாரை பின்தொடர்கிறார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று ட்விட்டரில் சேர்ந்த நடிகர் சூர்யா ஒரேயொரு நிறுவனத்தை மட்டும் பின்தொடர்கிறார்.

இத்தனை நாட்களாக ட்விட்டர் பக்கம் வராத சூர்யா மகளிர் தினமான இன்று காலை 11.30 மணிக்கு ட்விட்டரில் சேர்ந்தார். @Suriya_offl என்பது தான் சூர்யாவின் ட்விட்டர் ஐடி ஆகும். அவர் ட்விட்டரில் இணைந்த ஒன்றரை மணிநேரத்தில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

Guess who is followed by Suriya

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் சேர்ந்த அன்றும் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்டரில் சூர்யாவை 25 ஆயிரம் பேர் பின்தொடர்ந்தாலும் அவர் ஒரேயொரு நிறுவனத்தை மட்டுமே பின்தொடர்கிறார்.

Guess who is followed by Suriya

அவரது தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்டை தான் சூர்யா ட்விட்டரில் பின்தொடர்கிறார். சூர்யா மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் தனது செல்பி ஒன்றையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இனி ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

English summary
Suriya who joined twitter on women's day is following his production company 2D entertainment.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos