Guntur Kaaram Box Office: லியோ, சலார் முதல் நாள் வசூலை முறியடிக்காத மகேஷ் பாபுவின் குண்டூர் காரம்!

சென்னை: திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் மகர சங்கராந்தியை முன்னிட்டு வெளியான மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் முதல் நாளில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தினாலும் சமீபத்தில் தெலுங்கில் வெளியான சலார் மற்றும் விஜய்யின் லியோ பட வசூலை அது முறியடிக்க முடியவில்லை.

இந்த சங்கராந்தி மற்றும் பொங்கலை பொறுத்தவரை கேப்டன் மில்லர், அயலான் படங்களின் லைஃப் டைம் வசூலை முதல் நாளிலேயே வசூல் வேட்டையாடி விட்டார் மகேஷ் பாபு. கடந்த ஆண்டு விஜய்யின் வாரிசு படம் ஃபேமிலி என்டர்டெயினராக வெளியான நிலையில், அதை போலவே இந்த ஆண்டு குண்டூர் காரம் படத்தைக் கொடுத்துள்ளார்.

Guntur Kaaram failed to beat Leo and Salaar at Box Office but its a Sakaranti winner

கலவையான விமர்சனங்கள்: வழக்கம் போலவே இந்த முறையும் மகேஷ் பாபு படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. அம்மா சென்டிமென்ட்டை வைத்து திரிவிக்ரம் மகேஷ் பாபுவுக்கு ஒரு ஃபேமிலி என்டர்டெயினர் படத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால், இப்போதெல்லாம் பெரிய பெரிய துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுடும் படங்களை தான் ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று பார்க்க ஆரம்பிக்கின்றனர். அல்லது பெரிய நடிகர்கள் படங்கள் என்றால் செல்கின்றனர்.

முதல் நாள் வசூல் எவ்வளவு?: குண்டூர் காரம் திரைப்படம் முதல் நாளில் உலகளவில் 94 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல் நாளில் அந்த படம் 80 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியிருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், 94 கோடி ரூபாய் என்பது பெரிய வசூல் வேட்டை தான். 100 கோடியை முதல் நாளிலேயே தட்டித் தூக்கி இருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

லியோ, சலார் வசூலை முந்தவில்லை: ஆனால், முதல் நாளில் விஜய்யின் லியோ படம் 145 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருந்தது. அதே நேரத்தில் பிரபாஸின் சலார் 172 கோடி ரூபாய் வசூலை ஈட்டி அதகளம் செய்திருந்தது. இந்நிலையில், மகேஷ் பாபுவின் படம் இந்த இரு படங்களின் முதல் நாள் வசூலை முறியடிக்கவில்லை. இதை வைத்து ரசிகர்கள் மத்தியில் சோஷியல் மீடியா சண்டைகளும் வெடித்துள்ளன.

2ம் நாள் வசூல் எவ்வளவு?: ஆனால், சலார் மற்றும் லியோ பட்ஜெட் மற்றும் இயக்குநர்களின் ஹைப் என எதுவும் இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் குடும்ப படமாக எடுத்து மகேஷ் பாபு மாஸ் காட்டி உள்ளார் என அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். 2வது நாளில் குண்டூர் காரம் படம் 80 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக 174 கோடி ரூபாயை உலகம் முழுவதும் குண்டூர் காரம் வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர். பொங்கல் விடுமுறை பெரிது என்பதால் வேற லெவல் வசூல் வேட்டையை குண்டூர் காரம் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X