'நடிக்கணும்னு நச்சரிச்சீங்களாமே ஜிவி பிரகாஷ்?'

By Shankar

எப்படியாவது என்னை ஹீரோவாக்குங்க என இயக்குநர்களை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நச்சரித்ததாகக் கூறப்பட்ட புகார்களை மறுத்தார் ஜிவி பிரகாஷ்.

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் முதல் முறையாக பென்சில் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் ஸ்ரீதிவ்யா.

கவுதம் மேனனிடம் பணியாற்றிய மணி நாகராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்துக்கு இசையமைப்பவரும் ஜிவி பிரகாஷ்தான். .

இயக்குனர் மணி நாகராஜ் இந்தப் படம் குறித்து கூறுகையில், "நான் ஜி.வி.பிரகாஷ் ரெக்கார்டிங்ல பாடும்போது கேட்டிருக்கிறேன். அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு பாடுவார். அவருக்குள் ஒரு நடிகன் இருக்கான்னு எனக்கு தெரிஞ்சுது.

என்னுடைய முதல் படத்தில் அவரை நடிக்க வைச்சா என்னன்னு தோணுச்சு. கதையை அவர்கிட்ட சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது.

GV Prakash denies false allegations

இந்த படம் ஒரு பள்ளியில் நடக்கிற விஷயத்தை மையமாக வைத்து திரில்லர் கதையாக படமாக்கியுள்ளோம். இதுவரைக்கும் இப்படி ஒரு விஷயத்தை யாருமே தொட்டதில்லை. 12-ம் வகுப்பு வரைக்கும் பள்ளிக்கூடத்தில் பென்சில் என்பது ரொம்ப முக்கியமான விஷயம். எழுதிய பிறகும், தேவைப்படும் போது அழித்துக் கொள்ளலாம். படத்தின் கதைக்கும் அது பொருந்தியதால் இந்த தலைப்பு வைத்தோம்," என்றார்.

ஆனால், தன்னை ஹீரோவாக்க வேண்டும் என ஜிவி பிரகாஷ்தான் நச்சரித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதுகுறித்துக் கேட்டபோது இயக்குநர் மணி நாகராஜ் மறுத்தார்.

இதே கேள்வியை ஜிவி பிரகாஷிடம் கேட்டபோது, "இயக்குனர் மணி நாகராஜும் நானும் விளம்பரங்களுக்கு இசையமைத்த நாட்களிலேயே நல்ல நண்பர்கள்.

அவர் நிறைய படம் ஆரம்பிச்சு பாதியிலேயே ட்ராப் ஆகிடுச்சு. ஒரு படமாவது டைரக்டர் பண்ணிவிட வேண்டும் என முயற்சி செய்துகொண்டு இருந்தார். அவருக்கு கைகொடுக்கணும்னுதான் நட்பு அடிப்படையில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டேன். நானாக வற்புறுத்தி வாய்ப்பு கேட்கவில்லை," என்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X