twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 பசுக்கன்றுகள் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்: ஹாட்ஸ் ஆஃப்

    By Siva
    |

    Recommended Video

    மக்களுக்கு 500 பசுக்கன்றுகளை வழங்கிய ஜி.வி.பிரகாஷ்- வீடியோ

    சென்னை: நடிகர் ஜி.வி. பிரகாஷ் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 பசுக்கன்றுகளை வழங்கியுள்ளார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரையுலக பிரபலங்கள் உதவி செய்து வருகிறார்கள். நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் இரண்டு லாரிகள் நிறைய நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.

    மேலும் களத்தில் இறங்கியும் உதவி செய்து வருகிறார்.

    பசுக்கன்றுகள்

    பசுக்கன்றுகள்

    கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜி.வி. பிரகாஷ் கஜா புயலால் வீடு, உடைமைகளை இழந்து வாடும் பெண்கள் 500 பேருக்கு பசுக்கன்றுகளை வழங்கினார். ஜி.வி. பிரகாஷ் செய்த இந்த உதவியை அவரின் ரசிகர்கள் தவிர்த்து அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    வாழ்வாதாரம்

    வாழ்வாதாரம்

    விவசாய மக்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கவே 500 பசுக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த இது உதவி செய்யும். விவசாயத்திற்கு தேவையான மரக்கன்றுகள், சாகுபடி செலவு, கால்நடைகள் ஆகியவற்றை தன்னார்வலர்கள் செய்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அச்சம் நீங்கி தன்னம்பிக்கை பெறுவார்கள் என்று ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    அரசுகள்

    அரசுகள்

    மத்திய, மாநில அரசுகள் தங்களின் பணிகளை முடுக்கிவிட வேண்டும். மின்சாரம் இல்லாமல் கிராமங்கள் இருளில் உள்ளன. அவர்கள் விரைவில் வெளிச்சத்தை பார்க்க உதவ வேண்டும். கலப்பை மக்கள் இயக்கத்தினர் பசுக்கன்றுகளை சேகரித்துக் கொடுத்தனர் என்று ஜி.வி. பிரகாஷ் கூறியுள்ளார்.

    பாராட்டு

    வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்கு 500 பசுக்கன்றுகளை வழங்கிய ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் வந்து குவிகின்றது. வாழ்த்துக்கள் ஜி.வி. பிரகாஷ். உங்களின் நற்பணி தொடரட்டும்.

    English summary
    Actor cum music composer GV Prakash Kumar has given 500 calves to people affected by Gaja cyclone.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X