வாவ்.. என்ன ஸ்டைலு..என்ன லுக்கு.. கலக்குறீங்களே ஜிவி!

சென்னை : அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் இசையமைத்த சூரரைப்போற்று திரைப்படத்தின் இசை அனைவரையும் பாராட்ட வைத்திருக்கிறது.

சிறந்த பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும் இப்போது வலம் வந்து கொண்டிருக்கும் ஜி வி பிரகாஷ் குமார் தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வந்ததை தொடர்ந்து இப்பொழுது ஹாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார்.

இசையமைப்பாளராக பலரையும் கவர்ந்த ஜிவி பிரகாஷ் நடிப்பிலும் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் அதே சமயம் இப்பொழுது மெர்சலான லுக்கில் செம ஸ்டைலில் அனைவரும் அசந்து போகும் புகைப்படத்தை வெளியிட்டு அசர வைத்துள்ளார்.

நடிகராகவும்

நடிகராகவும்

தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜி வி பிரகாஷ் குமார், மிகச் சிறந்த இசையமைப்பாளர் மட்டுமல்லாமல் நடிகராகவும், பாடகராகவும் இருந்து வருகிறார்.

மிகப் பெரிய பங்கு

மிகப் பெரிய பங்கு

இப்போதுள்ள தலைமுறையினருக்கு பிடிக்கின்ற வகையில் இசை அமைப்பதில் வல்லவரான ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து படத்தில் வரும் இசை அசுரன் வெற்றிக்கு மிகப் பெரிய பங்கு வகித்தது.

விருதுகளும் கிடைக்கும்

விருதுகளும் கிடைக்கும்

அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகிவந்த சூரரைப்போற்று இப்பொழுது வெளியாகி இருக்கும் நிலையில் அந்தத் திரைப்படமும் இப்பொழுது அனைவரின் பாராட்டுக்களை பெற்று பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இதிலும் ஜிவி-யின் இசை ஆளுமை பெரும் பங்கு வகிக்க அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருவதோடு விருதுகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாலிவுட் படத்தில்

ஹாலிவுட் படத்தில்

இசையமைப்பாளராக பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பிலும் முழு மூச்சுடன் இறங்கி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையிலும் கைநிறைய படங்களுடன் நடித்து வரும் ஜி வி ஐயங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், 4ஜி, ஜெயில், காதலிக்க யாருமில்லை, பேச்சுலர் என பல படங்களில் நடித்து வரும் அதே சமயம் ஹாலிவுட்டில் "டிராப் சிட்டி " என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் தனது அறிமுகத்தை கொடுக்க உள்ளார்.

செம ஸ்டைலிஸாக

செம ஸ்டைலிஸாக

தனது ஒவ்வொரு அடியிலும் திரையுலகினரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் மிரள வைத்து வரும் ஜிவி பிரகாஷ் குமார் இப்பொழுது பலரும் வியந்து பார்க்கும் அளவிற்கு மெர்சலான லுக்கில் பிளாக் பிளேசரில், பிளாக் அண்ட் பிளாக்கில் செம ஸ்டைலிஸாக சோபாவில் சாய்ந்தபடி உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் அசர வைத்ததோடு, ஒரு சாயலில் ஹிந்தி நடிகர் ஷாகித் கபூர் போன்று இருக்கிறார் எனவும் சொல்லி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X