ஆமா என்னை ஏமாத்திருக்காங்க.. அவங்களைத்தான் பாதிக்கும்.. யாரை சொல்கிறார் ஜிவி பிரகாஷ்?
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன் ஜிவி பிரகாஷ். ஆரம்பத்தில் இப்படி அவர் அடையாளப்பட்டாலும் தற்போது சிறந்த இசையமைப்பாளர், நல்ல நடிகர் என்ற அடையாளத்தோடு இருக்கிறார். அவரது பாடல்கள் பலரது ஃபேவரைட்டாக திகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவரது நடிப்பில் அடுத்ததாக பிளாக்மெயில் திரைப்படம் வெளியாகவிருக்கும் நிலையில் அவரது பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். 17 வயதில் அந்த படத்துக்கு அவர் இசையமைத்தார். வெயில் படம் வெயிட்டேஜான கதை என்பதால் அந்தப் படத்தில் ஜிவி பிரகாஷின் இசையை கேட்ட ஒட்டுமொத்த திரையுலகமும், இந்த சிறிய வயதில் இப்படிப்பட்ட ஒரு படத்துக்கு சிறப்பாக இசையமைக்க தனித்திறமை வேண்டும் என அவரை உச்சி முகர்ந்து கொண்டாடியது.
முன்னணி இசையமைப்பாளர்: வெயில் படம் கொடுத்த வெற்றியால் ஜிவி பிரகாஷுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அந்தவகையில் ரஜினி நடித்த குசேலன் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் மேற்கொண்டு அடையாளப்பட்டார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன் என்று குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அந்த பிரபல்யத்தை விட ஜிவி பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர் என்ற பிரபல்யம் அவரிடன் விரைவிலேயே வந்து சேர்ந்தது.
தேசிய விருது: செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஜிவி பிரகாஷ் அமைத்திருந்த இசை உச்சக்கட்ட க்ளாசிக். அதற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை. இது பலரையும் அதிருப்தியடைய செய்தது. தொடர்ந்து இசையமைத்து வந்த அவருக்கு சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருது கிடைத்தது. ஒருவழியாக பல வருடங்களுக்கு பிறகு ஜிவி பிரகாஷுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நடிப்பில் கவனம்: மேலும், அவர் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில் த்ரிஷா இல்லனா நயன் தாரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் தொடர்ந்து பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் நடித்த படங்களிலேயே முக்கியமான படங்களாக அமைந்தது, ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான சர்வம் தாளமயம், சசி இயக்கத்தில் உருவான சிவப்பு மஞ்சள் பச்சை, பாலா இயக்கத்தில் உருவான நாச்சியார் ஆகிய படங்கள்.
பிளாக்மெயில்: இருப்பினும் அவருக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்காமல் இருக்கிறது. அடுத்ததாக அவரது நடிப்பில் பிளாக்மெயில் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதற்கிடையே சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டு; ஒரு மகளுக்கு தந்தையான ஜிவி; திடீரென அவரை பிரிவதாக அறிவித்தார். சைந்தவியும் அதனையே அறிவித்தார். இந்நிலையில் ஜிவி பிரகாஷ் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
ஜிவி பிரகாஷ் பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் நிறைய பேருக்கு உதவி செய்வேன். அவர்களில் சிலர் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள்தான். அப்போது எனக்கு, 'ஏன் இப்படி செய்தார்கள். இப்படி ஏமாற்றாமல் இருந்திருந்தால் அந்த உதவி சரியான நபர்களுக்கு சென்று சேர்ந்திருக்குமே; இப்படி செய்ததால் என்ன பலன். அவர்களைத்தானே பாதிக்கப்போகிறது' என தோன்றும். ஏமாற்றங்களை சந்தித்தாலும் நான் எனது கேரக்டரை மாற்றிக்கொள்ளமாட்டேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











