ஷூட்டிங்கின்போது ரவுடிகள் கூட்டத்தில் சிக்கிய ஆர்யாவின் காதலி.. ஓடிச் சென்று காப்பாற்றிய ஜிவிபி

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படத்தின் படப்பிடிப்பின் போது நிஜ ரவுடிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: படப்பிடிப்பின் போது உண்மையாக நடைபெற்ற தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த ஜி.வி.பிரகாஷ் மற்றும் அபர்ணதி ஆகியோர் உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் ஜெயில். ஜி.வி.க்கு ஜோடியாக ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதி நடிக்கிறார்.

GV Prakash runs for life with Aparnathi

சென்னையில் நடக்கும் ரவுடியிசத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், சென்னை ஓஎம்ஆரில் உள்ள கண்ணகி நகரில் படமாக்கப்பட்டு வருகிறது.

கண்ணகி நகர் என்றாலே அடிக்கடி நாம் செய்திகளில் படிப்பது, அடிதடி, கேங்வார் தான். இந்நிலையில், சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி சம்பந்தப்பட்ட காட்சி அங்கு படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, இருகோஷ்டிகளுக்கு இடையே நிஜமாகவே சண்டை ஏற்பட்டிருக்கிறது. கத்தி, அரிவாள், கம்போடு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

இதை பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து அந்த இடத்தில் இருந்து தப்பியோடினர். உயிர் பிழைத்தால் போதும் என்று ஜி.வி.பிரகாஷும், அபர்ணதியும் அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் தஞ்சம் புகுந்தனர். நிஜ பைட் இரண்டு மணி நேரம் முடிந்த பிறகு, மீண்டும் படப்பிடிப்பை நடத்தியுள்ளார் வசந்தபாலன்.

இந்த சம்பவம் குறித்த தகவலை படக்குழுவினர் தற்போது கசியவிட்டிருக்கின்றனர். படத்துக்கு இதுவும் ஒரு பப்ளிசிட்டியாக இருக்கும் என அவர்கள் நினைத்திருப்பார்கள் போல. எது எப்படி இருந்தாலும், இத்தனை ஆபத்தான சூழ்நிலையிலும் அபர்ணதியை காபந்து செய்த ஜி.வி.பிரகாஷை பாராட்டியே தீரவேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X