கமல் படத்தில் இணையும் பிரபலம்.. அட வேற மாதிரி இருக்குமே.. ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்னை: கமல் ஹாசன் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இவை தவிர்த்து படங்களை தயாரிப்பதிலும் பிஸியாக இருக்கிறார். இதன் காரணமாக கமலின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் கமல் - அன்பறிவ் படம் பற்றிய புதிய தாக்வல் ஒன்று வெளியாகி கோலிவுட்டை ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலில் கவனம் செலுத்திய கமல் ஹாசன்; லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் மீண்டும் சினிமாவுக்குள் வந்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. மேலும் சூர்யாவும் அதில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் கமலின் நடிப்பை பார்த்த ரசிகர்கள்; ஆண்டவர் தரமாக ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார் என்று பூரித்து போயினர். மேலும் அந்தப் படம்தான் லோகேஷ் கனகராஜின் கரியரையும் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றது.

இந்தியன் 2: விக்ரம் படம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தில்; இந்தியன் 2 படத்திலும் விறுவிறுவென்று நடித்தார் கமல். இந்தப் படத்தின் முதல் பாகம் மெகா ஹிட்டானதால் இந்தப் படத்தின் மீதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் யாருமே எதிர்பார்க்காத வகையில் படுதோல்வியையும் கடுமையான ட்ரோலையும் சந்தித்தது. முக்கியமாக கமல் ஹாசனின் மேக்கப், ஷங்கரின் மேக்கிங் என்று எதையும் விட்டுவைக்காமல் ரசிகர்கள் வறுத்தெடுத்துவிட்டனர். இதனால் கமல் கொஞ்சம் அப்செட்தான்.
இணைந்த க்ளாஸ் கூட்டணி: சூழல் இப்படி இருக்க ஒட்டுமொத்த கோலிவுட்டுக்கும் சர்ப்ரைஸ் தரும் விதமாக ஒரு அறிவிப்பு வெளியானது. அதாவது மணிரத்னமும், கமல் ஹாசனும் இணையும் படம் பற்றிய அறிவிப்புதான் அது. படத்துக்கு தக் லைஃப் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் கமலுடன் திரிஷா, சிம்பு, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே கமல் - மணி ரத்னம் இணைந்து நாயகன் என்ற க்ளாஸ் படத்தை கொடுத்திருப்பதால் இதன் மீதும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
அன்பறிவுடன் கூட்டணி: இந்தப் படம் அடுத்த வருடம் வெளியாகவிருக்கிறது. இதற்கிடையே இயக்குநர் ஹெ.வினோத்துடன் ஒரு படத்தில் கமிட்டானார் கமல் ஹாசன். அதுகுறித்து அறிவிப்பும் வெளியானது. ஆனால் திடீரென அந்தப் படம் பாதியில் கைவிடப்பட்டது. அதனையடுத்து வினோத் விஜய் படத்தை இயக்க சென்றுவிட்டார். கமல் ஹாசனோ சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். இந்தக் கூட்டணியும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்தான்.
ஜிவி பிரகாஷ் இசை: இளைஞர்களின் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பதால் இந்தப் படம் எந்த மாதிரியான ட்ரீட்டை கொடுக்கவிருக்கிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். இந்நிலையில் இந்தப் படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் கமல் படத்துக்கு ஜிவி பிரகாஷ் முதன்முறையாக இசையமைப்பார் என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











