என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்க முடிவு செய்திருக்கிறார். ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்று அறிவித்துவிட்டார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்திருக்கிறது. அநேகமாக அவரது கடைசி படத்தை யார் இயக்குவார் என்ற கேள்விதான் பலரிடமும் இப்போது இருக்கிறது. வெற்றிமாறன், ஆர்.ஜே.பாலாஜி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோரில் யாராவது ஒருவர் இயக்கலாம் என கூறப்பட்ட சூழலில் இப்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT (Greatest Of All Time) படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது.

H Vinoth Will Direct Vijay s Thalapthy 69 Movie Here is the details

விறுவிறு ஷூட்டிங்: படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு அங்கு ஒரு பாடல் காட்சியும் ஷூட் செய்யப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி நாடுகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேறு ஒரு லொக்கேஷனில் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் சகோதரி பவதாரிணி உயிரிழந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மீண்டும் தொடங்கிய ஷூட்டிங் கேரளாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது.

டைம் ட்ராவல்: இந்தப் படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகிறது என்றும் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் கமாண்டோ ட்ரெஸ்களில் கையில் துப்பாக்கியுடன் வந்ததை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இதில் விஜய் கமாண்டோவாக நடிக்கிறாரோ என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர். அதுமட்டுமின்றி, தந்தை விஜய்க்கு நடக்கும் துரோகத்தை மகன் விஜய் டைம் ட்ராவல் செய்து முறியடிப்பதுதான் ஒன்லைன் என்றும் சொல்லப்படுகிறது.

தமிழக வெற்றி கழகம்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் விஜய் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக தெரிவித்தார். மேலும் மக்கள் பணியில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்றும், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். விஜய்யின் அரசியல் என்ட்ரி அவரது ரசிகர்களிடையே சந்தோஷத்தை கொடுத்தாலும் படம் நடிக்கமாட்டேன் என்று அவர் கூறியது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்திருக்கிறது.

கடைசி படம்: இதனையடுத்து அவரது 69ஆவது (கடைசி படம் என்று கூறப்படுகிறது) படத்தை யார் இயக்குவார் என்ற கேள்விகள் எழுந்தன. முதலில் வெற்றிமாறன் இயக்குவதாக தகவல் வெளியாகி பிறகு ஆர்.ஜே.பாலாஜியோ அல்லது கார்த்திக் சுப்புராஜோ இயக்கலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் தளபதி 69 படத்தின் இயக்குநர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ஹெச்.வினோத் இயக்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாம். வினோத் பொதுவாகவே தன்னுடைய படங்களில் சமூக அக்கறையுள்ள விஷயங்களை ஆணித்தரமாக பேசக்கூடியவர். அவரது இயக்கத்தில் விஜய் நடித்தால் கண்டிப்பாக தரமான சம்பவம் உறுதி என்று ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X