ஹன்சிகாவின் வருங்கால கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிடுச்சா? அங்கேயும் ஹன்சிகா டான்ஸ் ஆடியிருக்காரே!

சென்னை: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈஃபிள் கோபுரம் அருகே சமீபத்தில் தனது வருங்கால கணவரை நடிகை ஹன்சிகா அப்படி அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ஹன்சிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், ஹன்சிகாவின் வருங்கால கணவரான சோஹேல் கத்தூரியாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆன அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

திருமண அறிவிப்பு

திருமண அறிவிப்பு

எங்கேயும் காதல் படத்தை போலவே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈஃபிள் கோபுரம் அருகே சமீபத்தில் தனது வருங்கால கணவரை நடிகை ஹன்சிகா அப்படி அறிமுகம் செய்து வைத்திருந்தார். ஹன்சிகாவுக்கும் சோஹேல் கதூரியாவுக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. மேரி மீ என ஹார்டீன் எல்லாம் போட்டு முட்டிப் போட்டு ஹன்சிகாவுக்கு மோதிரம் மாற்றினார் சோஹேல்.

டிசம்பரில் திருமணம்

டிசம்பரில் திருமணம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகாவுக்கும் தொழிலதிபர் சோஹேல் கதூரியாவுக்கும் வரும் டிசம்பர் மாதம் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் அதிகாரப்பூர்வமாக த்ருமண தேதியையும், திருமணம் நடைபெற உள்ள இடத்தையும் ஹன்சிகா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் தாரம்

இரண்டாம் தாரம்

நடிகை ஹன்சிகா தொழிலதிபரை திருமணம் செய்யப் போகும் தகவல் அறிந்து பலரும் வாழ்த்தி வந்த நிலையில், சோஹேலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்ட அதிர்ச்சியான தகவல் வீடியோ ஆதாரத்துடன் தற்போது வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. அதில் வேடிக்கை என்னவென்றால், தனது தோழியின் திருமணத்தில் நடிகை ஹன்சிகா கலந்து கொண்டு ஆடிப் பாடி மகிழ்ந்துள்ள காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

திருமணத்தில் ஹன்சிகா டான்ஸ்

திருமணத்தில் ஹன்சிகா டான்ஸ்

அந்த திருமணத்திலும் நடிகை ஹன்சிகாவே டான்ஸ் ஆடியிருக்கும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர். அந்த மணப்பெண்ணுக்கு எப்படி ஹன்சிகா கூட இருந்தே குழி பறித்து இருக்கிறார் பாருங்க என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். நடிகை ஹன்சிகா முன்னதாக நடிகர் சிம்புவை காதலித்து பிரேக்கப் செய்தது குறிப்பிடத்தக்கது.

6 வருஷம் ஆகுது

6 வருஷம் ஆகுது

ரிங்கி என்பவருடன் சோஹேல் கதூரியாவுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இருவரும் விவாகரத்து செய்த நிலையில், தற்போது ஹன்சிகாவை சோஹேல் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீண்ட நாட்களாகவே இருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்ததாகவும் ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X