சொந்தக் கதையை சொந்தக் காசில் படமெடுக்கும் சிம்பு

By Mayura Akilan

சிம்பு சொந்தமாக தயாரிக்கும் இது நம்ம ஆளு படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னுடைய முன்னாள் காதலி நயன்தாரா உடன் ஜோடி சேர்ந்துள்ளது அனைவரும் அறிந்த விசயம்தான்.

ஆனால் இந்தப் படத்தில் நயன்தாராவின் காதல் கதையும் இணைந்துள்ளது என்பதுதான் புதிய செய்தி. தன்னுடைய சொந்தக் கதையையே இப்போது இது நம்ம ஆளு படத்தில் திணித்து படமாக்கி வருவதாக கூறப்படுகிறது.

வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்பு நயன்தாரா இடையே ஏற்பட்ட காதல் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. காதலித்தது குறுகிய காலம்தான் என்றாலும், அப்போது அவர்கள் லிப்லாக் செய்த போட்டோக்கள் இன்றைக்கும் இணையதளங்களில் சூடாக பரப்பப்பட்டு வருகின்றன.

உடைந்த காதல்

உடைந்த காதல்

இந்த போட்டோக்கள்தான் சிம்பு - நயன்தாரா இடையேயான காதல் முறிவுக்கு காரணமாக இருந்தது. நயன்தாராவுடனான காதல் பிரிவுக்குப் பின்னர் சில ஆண்டுகளில் ஹன்சிகாவை பிக்கப் செய்தார் சிம்பு.

ஹன்சிகா உடன் காதல்

ஹன்சிகா உடன் காதல்

ஹன்சிகா உடனான காதல், சந்திப்பு, போட்டோக்களையும் அவ்வப்போது தனது டுவிட்டரில் வெளியிட்டு மேலும் இணையதளங்களுக்கு தீனி போட்டார் சிம்பு.

நயன்தாரா உடன் ஜோடி

நயன்தாரா உடன் ஜோடி

இதற்கிடையே பிரபுதேவா உடன் திருமணம் வரை போன நயன்தாராவின் காதல் முறிந்த உடன் ஆறுதல் தரும் வகையில் இது நம்ம ஆளு படம் மூலம் ஜோடி சேர்ந்தார் சிம்பு.

இரண்டாவதும் பிரச்சினை

இரண்டாவதும் பிரச்சினை

அது ஹன்சிகா உடனான காதல் முறிவுக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. திடீரென்று சிம்பு உடன் காதல் எதுவும் இல்லை என்று அறிவித்தார் ஹன்சிகா.

தொடரும் சிம்பு

தொடரும் சிம்பு

இதையடுத்து தன்னுடைய முதல் காதலியான நயன்தாராவுடன் மீண்டும் காதல் வளர்த்துக்கொண்டிருக்கிறார் சிம்பு.

சொந்தக்காசில் படம்

சொந்தக்காசில் படம்

அதற்காகவே தனது சொந்த காசில் இது நம்ம ஆளு படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு-நயன்தாராவின் காதலை பேஸ் பண்ணியே கதை நகர்த்தப்பட்டுள்ளதாம்.

ஹன்சிகா காதலும் இருக்கு

ஹன்சிகா காதலும் இருக்கு

அதோடு, இடையினில் புகுந்த ஹன்சிகாவின் காதலையும் சொல்லியிருக்கிறார்களாம். அதனால்தான், அப்படத்தின் டீசரில் உங்களுக்கு யாரை பிடிக்கும்? என்று நயன்தாரா, சிம்புவைப்பார்த்து கேட்க, உன்னை மட்டும்தான் பிடிக்கும் என்று அவர் சொல்வார். அதற்கு இதே பதிலை எத்தனை பேர்கிட்டதான்டா சொல்லுவே என்று சூரி ரிப்பீட்டு அடிப்பார்.

மாட்டிக்கிட்டான் சிலம்பரசன்

மாட்டிக்கிட்டான் சிலம்பரசன்

அடுத்து, நயன்தாரா, அந்த பொண்ணுக்கும் உங்களுக்கிடையே எதற்காக லவ் பிரேக்அப் ஆனது? என்று கேட்பார். இதற்கு சிம்பு பதில் சொல்ல முடியாமல் தவிக்க, மாட்னான்டா சிலம்பரசன் என்று சூரி கமெண்ட் கொடுப்பார்.

சொந்தக்கதையே படமாக

சொந்தக்கதையே படமாக

இது நம்ம ஆளு படத்தில் ஹன்சிகாவின் காதலை இப்படித்தான் நுழைத்திருக்கிறார்களாம். க தனது சொந்த காதல் கதையை சொந்த காசில் படமெடுக்கிறார் சிம்பு. இது எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பதை ரசிகர்கள்தான் தீர்மானிக்கவேண்டும் என்று கிசுகிசுக்கின்றனர் கோலிவுட் வட்டாரங்களில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X