ஹேப்பி பர்த்டே அதர்வா.. இந்த பானா காத்தாடி இன்னும் மேலே பறக்கட்டும்.. டிரெண்டாகும் #HBDAtharvaa
சென்னை: நடிகர் அதர்வாவின் 31வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
Recommended Video
மறைந்த நடிகர் முரளியின் மகனான அதர்வா கடந்த 2010ம் ஆண்டு இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முப்பொழுதும் உன் கற்பனைகள், இரும்புக் குதிரை, பரதேசி, 100 என பல படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள அதர்வாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் #HBDAtharvaa என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஹேப்பி பர்த்டே அதர்வா
1989ம் ஆண்டு மே 7ம் தேதி மறைந்த பிரபல நடிகர் முரளி மற்றும் சோபா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் அதர்வா. தனது 31வது பிறந்தநாளை அதர்வா கொண்டாடி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் பிரபலங்களும் தமிழ் சினிமா ரசிகர்களும் அதர்வாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கிங் அதர்வா
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கேலண்டர் ஷூட் ஒன்றில் ராஜா கெட்டப் போட்டு நடிகர் அதர்வா போஸ் கொடுத்திருந்தார். அதர்வாவின் பர்த்டே காமன் டிபியாக அந்த புகைப்படத்தை வைத்து ரசிகர்கள் ஹேப்பி பர்த்டே அதர்வா என்றும், கிங் அதர்வா என்றும், நடிகர் மாதவனை மேடி என அழைப்பது போல அதர்வாவை ஆடி என அழைத்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் வாழ்த்து
லேட்டஸ்ட்டாக நடிகர் விஜய் போலவே அவருடன் இருக்கும் அதர்வாவின் புகைப்படம் இணையத்தில் டிரெண்டானது. அந்த புகைப்படத்தை பகிர்ந்து நடிகர் அதர்வாவுக்கு விஜய் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். கோலிவுட்டின் இளம் ஹீரோவான அதர்வாவுக்கு பல பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரியா பவானி ஷங்கருடன்
இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள குருதி ஆட்டம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையை போலவே
கோலிவுட்டில் நடிகர் முரளிக்கு எப்பவுமே ரசிகர்கள் அன்பு நிறைந்திருக்கும். அவரது படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும். தந்தையை போலவே நடிகர் அதர்வா நடிப்பில் வெளியாகும் படங்களும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. பாலாவின் பரதேசி படத்தில் நடித்து, தன்னுடைய முழு நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தியிருந்தார் அதர்வா.

நயன்தாரா ரசிகர்கள்
சமந்தா, அமலா பால், ஹன்சிகா, ராஷி கன்னா என பல டாப் ஹீரோயின்களுடன் ஜோடி போட்டு நடித்த அதர்வா, இமைக்கா நொடிகள் படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு தம்பியாக நடித்து அசத்தியிருந்தார். நயன்தாரா சார்பாக அவரது ரசிகர்களும் அதர்வாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கோலிவுட்டில் இன்னும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து, இந்த பானா காத்தாடி இன்னும் மேலே பறக்க வேண்டும் என வாழ்த்துக்கிறோம்.


Click it and Unblock the Notifications











