ஹேப்பி பர்த்டே பிரபுதேவா: 'டான்ஸ் மன்னனுக்கு' வயசு 40

By Siva

சென்னை: டான்ஸ் மன்னன் என்று அழைக்கப்படும் பிரபுதேவா இன்று தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரத்தின் மனைவி கடந்த 1973ம் ஆண்டில் இதே நாளில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அவருக்கு சங்குபாணி சுந்தரம் என்று பெயர் வைத்தனர்.

அந்த குழந்தை வளர்ந்து 15 வயதை அடைந்த போது தந்தையின் வழியைப் பின்பற்றி திரைத்துறையில் டான்சரானது. அந்த சங்குபாணி சுந்தரம் தான் பிரபுதேவா.

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம்

பிரபு, கார்த்திக் நடித்த அக்னி நட்சத்திரம் படத்தில் ஒரு பாடலுக்கு கூட்டத்தோடு வந்து ஆடினார் பிரபுதேவா. இந்த படம் மூலம் அவர் டான்சரானார்.

வெற்றி விழா

வெற்றி விழா

கமல், பிரபு நடித்த வெற்றி விழா படத்தில் பிரபுதேவாவும் அவரது அண்ணன் ராஜு சுந்தரமும் துணை டான்ஸ் மாஸ்டர்களாக பணிபுரிந்தனர்.

குரூப் டான்சரில் இருந்து ஹீரோ

குரூப் டான்சரில் இருந்து ஹீரோ

பிரபுதேவா டான்சரில் இருந்து ஹீரோவாக உயர்ந்தார். சங்கர் இயக்கத்தில் அவர் நடித்த காதலன் படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதன் பிறகும் அவர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

டான்ஸ் மாஸ்டர், ஹீரோவில் இருந்து இயக்குனர்

டான்ஸ் மாஸ்டர், ஹீரோவில் இருந்து இயக்குனர்

பிரபுதேவா டான்ஸ் மாஸ்டர், ஹீரோவாக வலம் வந்தார். இந்நிலையில் அவர் நுவ்வு ஒஸ்தானன்டே நேனொத்தன்டனா என்ற தெலுங்கு படம் மூலம் இயக்குனரானார். முதல் படமே சூப்பர் ஹிட். அதை தமிழில் சம்திங் சம்திங் என்ற பெயரில் ரீமேக் செய்து வெற்றி கண்டார். இதையடுத்து பல படங்களை இயக்கியுள்ளார், இயக்கி வருகிறார்.

ரீமேக் மன்னன்

ரீமேக் மன்னன்

பிரபுதேவா இந்தியில் ரீமேக் செய்த வான்டட், ரவுடி ராத்தோர் ஆகிய படங்கள் ஹிட்டாகிவிட்டன. இதையடுத்து அவர் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி இந்தி நடிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

2 தேசிய விருது

2 தேசிய விருது

மின்சார கனவு மற்றும் இந்தி படமான லக்ஷ்யா ஆகியவற்றில் சிறப்பாக டான்ஸ் அமைத்ததற்காக பிரபுதேவாவுக்கு சிறந்த டான்ஸ் மாஸ்டருக்கான தேசிய விருது 2 முறை கிடைத்தது.

நேரில் வாழ்த்து சொன்ன நாசர்

நேரில் வாழ்த்து சொன்ன நாசர்

பிரபுதேவாவை நாசர் மற்றும் கன்னட நடிகர் உபேந்திரா ஆகியோர் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X