ரியல் ஹீரோ ராகவா லாரன்ஸுக்கு இன்று பிறந்தநாள்.. கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து!
சென்னை : சினிமாவில் உதவியாளராக இருந்து பின் பாடல்களுக்கு பின்னணி நடனம் ஆடுவதில் பணியாற்றி படிப்படியாக முன்னேறி இன்று இந்திய அளவில் சிறந்த நடன அமைப்பாளராகவும் நடிகராகவும் இயக்குனராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.
தனது தனித்துவமான நடனத்தின் மூலம் இன்று வரை பல கோடி ரசிகர்களை கவர்ந்து வரும் ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, விஜய், நாகார்ஜூனா என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.
நடனத்தில் வல்லவரான ராகவா லாரன்ஸ் பல திரைப்படங்கள் இயக்கி நடித்து வெற்றியும் பெற்று வரும் நிலையில் அக்டோபர் 29ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதை யொட்டி திரையுலகைச் சேர்ந்த பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் உலகெங்கிலும் உள்ள இவரின் கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டாடி வருகின்றனர்.

உதவியாளராக
தமிழில் பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ள பிரபல பைட் மாஸ்டர் சூப்பர் சுப்ராயனிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்த ராகவா லாரன்ஸின் நடனத் திறமையை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரை நடனக் குழுவில் சேர்த்து விட்டார்.

பேக்ரவுண்ட் டான்ஸராக
சிறு வயது முதலே நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட ராகவா லாரன்ஸ் தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் உருவான திரைப்படங்களில் உதவியாளராக பணியாற்றி வந்த நிலையில் சம்சார சங்கீதம், ஜென்டில்மேன் உள்ளிட்ட திரைப்படங்களில் பேக்ரவுண்ட் டான்ஸராக திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

சிறப்பு தோற்றத்தில்
தெலுங்கில் வெளியான ஸ்டைல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய நிலையில் அன்பின் "அற்புதம்" உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகனாகவும் ஒரு சில படங்களில் பாடல்களுக்கு சிறப்பு தோற்றத்தில் குத்தாட்டம் போட்டும் சென்றார்.

திரைப்படங்களை இயக்கி
திரைத்துறையில் தனது திறமையால் படிப்படியாக போராடி முன்னேறி வந்த ராகவா லாரன்ஸ் தெலுங்கில் முன்னணி நடிகர்களாக உள்ள சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பிரபாஸ் உள்ளிட்ட நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

தமிழில் முனி
இந்த நிலையில் தமிழில் முனி திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் வெற்றி பெற்ற ராகவா லாரன்ஸ் இன்று வரை பல திரைப்படங்களை இயக்கி தொடர் பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்து பாக்ஸ் ஆபீசை அதிர வைத்து வருகிறார்.

லட்சுமி பாம்
கமர்சியல் திரைப்படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான ராகவா லாரன்ஸ் முனி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் பாகங்களாக காஞ்சனா தொடர்ச்சி இன்றுவரை தொடர்ந்து கொண்டே வருகிறது. மேலும் காஞ்சனா திரைப்படம் இப்பொழுது ஹிந்தியில் அக்ஷய்குமார் நடிப்பில் "லட்சுமி பாம்" என்ற பெயரில் உருவாகி வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு நடனம்
இவ்வாறு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ராகவா லாரன்ஸ் நிஜ வாழ்க்கையிலும் ஏழைக் குழந்தைகளுக்கும், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பல உயிர்களையும் தனது சொந்த அறக்கட்டளையின் மூலம் இன்று வரை பல உயிர்களை காப்பாற்றி சமூகத்தில் மிகப்பெரிய நற்பெயருடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகள் பலரையும் நடனமாட வைத்தும் பலருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறார்.

வாழ்த்து மழை
இவ்வாறு அட்டகாசமான நடிப்பாலும் வியக்கவைக்கும் நடனத்தாலும் இன்று வரை தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் அனைவராலும் மதிக்கத்தக்க சிறந்த நடிகராகவும் நல்ல மனிதராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ரியல் ஹீரோ நடிகர் ராகவா லாரன்ஸ் அக்டோபர் 29ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்களின் வாழ்த்துக்களை கூறி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











