‘பாய்ஸ்’ சித்தார்த்துக்கு வயசு 35 ஆச்சாமே...
சென்னை: பாய்ஸ் படத்தில் பார்த்த 'பாய்' (பையன்) போலவே இன்றும் தோற்றத்தில் மெலிந்து காணப்படும் சித்தார்த்துக்கு வயது 35 ஆகி விட்டதாம்.
தற்போது நடித்து வரும் இளவயது ஹீரோக்களில் தனுஷ், சிம்பு இவர்களோடு ஒப்பிடுகையில் சித்தார்த் தான் வயது மூத்தவராக இருப்பார் போலும். ஆனாலும், அவரது அமுல் பேபி முகத்தைப் பார்த்தால் அவருக்கு 35 வயதாகிறது என யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஆனால், தான் இன்று தனது 35 வது பிறந்தநாளைக் கொண்டாடுவதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னைவாசி...
கடந்த 1979ம் ஆண்டு சென்னையில் பிறந்த சித்தார்த்தின் முழுப்பெயர் சித்தார்த் சூரியநாராயண். தனது இளமைக்கால பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார்.

வழிப்போக்கன்...
சித்தார்த் முதன் முதலில் மணிரத்னத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் பேருந்து பயணி போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஒரு நாயகன் உதயமாகினான்...
அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் தான் ஜெனிலியா, பரத், நகுல் போன்றவர்களும் அறிமுகமானார்கள்.

தொடக்கத்திலேயே முடிந்த மணவாழ்க்கை...
கடந்த 2003ம் ஆண்டு ஆரம்பித்த இவரது மணவாழ்க்கை மூன்றே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து சில நடிகைகளுடன் இவரது பெயர் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டது.

காதல் தேவதை...
சமீபகாலமாக நடிகை சமந்தாவும், சித்தார்த்தும் காதலிப்பதாகவும் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடகரும் கூட...
சித்தார்த் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த பின்னணிப் பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் கூட. தனது முதல் படமான பாய்ஸ்-ல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார் சித்தார்த்.

கனவு தேவதையே...
தமிழில் கடைசியா ‘தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் நடித்திருந்தார் சித்தார்த். இப்படத்தில் அவரது காதலி எனச் சொல்லப் படும் சமந்தாவும் கவுரவத் தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சம்மர் ஸ்பெஷல் ஜிகிர்தண்டா...
விரைவில் லட்சுமிமேனன் ஜோடியாக சித்தார்த் நடித்துள்ள ஜிகிர்தண்டா படம் ரிலீசாக உள்ளது.


Click it and Unblock the Notifications











