ஹேப்பி பர்த்டே சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன், கும்பகோணம் அருகே திருவீழிமிழலை என்னும் சிற்றூரில் பிறந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாகி இருக்கிறார்.
சினிமாவில் ஜொலிக்க பின்புலம் வேண்டும், கட்டுமஸ்தான உடல் வேண்டும், அழகு வேண்டும் என்ற ஏராளமான வேண்டும்களை உடைத்து எறிந்து இதோ இப்போது தானும் ஒரு சாக்லேட் பாயாக ஆக்ஷன் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

சினிமாவில் இரண்டரை மணி நேரத்தில் இடையில் வரும் ஒரே ஒரு பாடலில் சாதாரண நிலையில் இருந்து ஹீரோவாக உருவெடுப்பது போல் தோன்றினாலும் சிவகார்த்திகேயனை அப்படி எந்த பாடலும் மாற்றவில்லை. அவர் பட்ட பாடுகள் தான் மாற்றியுள்ளன.
''இந்த உயரம்ங்கறது இவனுக்கு அதிகம்னு சிலபேர் நினைக்கலாம். ஆனா இந்த உயரத்துக்கு வர்றதுக்கு கடின உழைப்பும், ஒழுக்கமும்,திறமையும்தான் காரணம். சம்பளம்லாம் எனக்கு பெரிய விஷயம் இல்லை. மிமிக்ரி பண்ணும்போது இங்கே இவ்வளவு பேமண்ட் தருவாங்ககறதுலாம் தெரியாது. நம்ப முடியாது. ஆனா கிடைக்கிற கைதட்டல்தான் என்னை பொறுத்தவரைக்கும் என்னோட பெரிய
சம்பாத்தியம். இப்பவும் அப்படித்தான் தியேட்டர்ல ஆடியன்ஸ்கிட்டேருந்து வர்ற கைதட்டலும், விசிலும்தான் முக்கியமா படுது. இந்த சந்தோஷத்தையும், திருப்தியையும் எத்தனை கோடிகளாலயும் கொடுக்க முடியாது,'' என சிரிக்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவாவின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த ஒரு வழிகாட்டி. இதில் எங்குமே அறிவுரையையோ, போதனையையோ பார்க்க முடியாது. ஒரு சாதாரண சராசரி இளைஞன் எப்படி பிரபலம் ஆனான் என்பதை இன்ச் பை இன்சாக சொல்கிறது சிவாவின் வளர்ச்சி.
சிவா இன்னும் பெரிய பெரிய உயரங்களைக் கூட தொடுவார். அதற்காக இபோதே சொல்லிக்கொள்கிறோம். அட்வான்ஸ் கங்கிராட்ஸ்!


Click it and Unblock the Notifications











