twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கென்னி எப்படி விக்ரம் ஆனார் தெரியுமா.. சியான் விக்ரம் குறித்த டாப் சீக்ரெட்ஸ்.. பர்த்டே ஸ்பெஷல்!

    |

    சென்னை: தனது வித்தியாசமான நடிப்புகளால் தமிழ் சினிமாவை வேற லெவலுக்கு கொண்டு சென்ற சியான் விக்ரமின் பிறந்த நாளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

    1966ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி கென்னடி ஜான் விக்டராக பிறந்த சாதாரண மனிதன், தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் தனக்கென பல பக்கங்களை தானாகவே முயற்சி செய்து எழுதி வைத்து சியான் விக்ரமாக உருவாகி உள்ளார்.

    ஆதித்ய வர்மா படத்தின் மூலம் மகன் நடிகராக அறிமுகமானாலும் விக்ரமுக்கான கிரேஸ் என்றும் ரசிகர்கள் மத்தியில் மாறாது.

    ஐந்து பிலிம் ஃபேர் விருதுகளையும் பிதாமகன் படத்திற்காகவும் தேசிய விருதையும் வென்ற விக்ரம் குறித்து சில சீக்ரெட் விஷயங்களை இங்கே பார்ப்போம்.

    காத்திருப்புக்கு காலம் தந்த பரிசு.. தடைக்கற்களை படிக்கல்லாக்கிய பிதாமகன்! #HBDChiyaanVikramகாத்திருப்புக்கு காலம் தந்த பரிசு.. தடைக்கற்களை படிக்கல்லாக்கிய பிதாமகன்! #HBDChiyaanVikram

    பெயர் மாற்றம்

    பெயர் மாற்றம்

    ஜான் விக்டர் மற்றும் ராஜேஷ்வரி தம்பதியினருக்கு மகனாக பிறந்த விக்ரமுக்கு கென்னடி என்ற பெயரை பெற்றோர்கள் வைத்திருந்தனர். சினிமாவில் அறிமுகமாகும் நேரத்தில், கென்னடி என்ற பெயரை மாற்ற விரும்பிய விக்ரம், தனது தந்தையின் விக்டர் பெயரில் விக் எடுத்துக் கொண்டு, தாயின் ராஜேஷ்வரி பெயரில் ர எடுத்துக் கொண்டு, விக்ரம் ஆக தனது பெயரை மாற்றிக் கொண்டார். சேது வெற்றி சியான் எனும் அடைமொழியை அவருக்கு கொடுத்தது.

    பம்பாய் படத்தில்

    பம்பாய் படத்தில்

    மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். முன்னதாக ராவணன் படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால், பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறது. பம்பாய் படத்தில் அரவிந்த் சாமிக்கு முன்னதாக விக்ரம் தான் நடிக்க வேண்டும். சில நாட்கள் நடித்தும் இருக்கிறார். ஆனால், தாடி எடுக்க மணிரத்னம் கேட்க, அடுத்த படத்திற்காக வளர்க்கிறேன் என்று அந்த படத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்.

    டப்பிங் ஆர்ட்டிஸ்ட்

    டப்பிங் ஆர்ட்டிஸ்ட்

    ஆரம்ப கால சினிமா வாழ்க்கை சியான் விக்ரமுக்கு மிகவும் சிரமமாகவே இருந்தது. சில நாட்கள் டப்பிங் கலைஞராகவும் விக்ரம் பணியாற்றியுள்ளார். காதலன் படத்தில் நடிகர் பிரபுதேவாவுக்கு குரல் கொடுத்ததே விக்ரம் தான். கமல்ஹாசனின் குருதிப்புனல் படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு விக்ரம் குரல் கொடுத்துள்ளார். கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் அபாஸுக்கும் விக்ரம் தான் டப்பிங் பேசினார்.

    கில்லி படத்தில்

    கில்லி படத்தில்

    சியான் விக்ரமின் தந்தை ஜான் விக்டரும் நடிகர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சியான் விக்ரமும், இயக்குநரும் தரணியும் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்களாக இருந்த நிலையில், கில்லி படத்தில் திரிஷாவின் அப்பாவாக விக்ரம் தந்தையை தரணி நடிக்க வைத்திருப்பார். திருப்பாச்சி படத்திலும் விக்ரம் தந்தை நடித்துள்ளார்.

    விக்ரம் – பிரசாந்த் உறவு

    விக்ரம் – பிரசாந்த் உறவு

    90களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த நடிகர் பிரசாந்துக்கும் விக்ரமுக்கும் இப்படி ஒரு உறவுமுறை இருக்கிறது. விக்ரமின் தாய் ராஜேஷ்வரியின் சகோதரர் தான் நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன். விக்ரமும், பிரசாந்தும் மச்சான் உறவு முறை கொண்டவர்கள் என்பதும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    ஜெர்மனி மொழியில்

    ஜெர்மனி மொழியில்

    கந்தசாமி படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே விக்ரமுக்கு ஹாலிவுட் படங்களில் வாய்ப்புகள் வந்ததாக செய்திகள் வைரலாகின. சியான் விக்ரமின் அசத்தலான நடிப்பு பல ஹாலிவுட் நடிகர்களையும் கவர்ந்துள்ளது. மணிரத்னம் இயகக்த்தில் விக்ரம் நடித்த ராவணன் படம் இந்திய சினிமாக்களிலேயே முதன் முறையாக ஜெர்மனி மொழியில் டப் செய்து வெளியானது வரலாறு.

    கோப்ராவுக்கு வெயிட்டிங்

    கோப்ராவுக்கு வெயிட்டிங்

    சியான் விக்ரமின் ஒட்டுமொத்த திறமையையும் உருக்கி பிழிந்து படமாக மாற்றி வருகிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. கோப்ரா படத்தில் சியான் விக்ரம் 20 வித்தியாசமான ரோல்களில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் வெளியான 7 வித கெட்டப்புகள் கொண்ட ஃபர்ஸ்ட் லுக்கே மிரட்டிய நிலையில், கோப்ரா படம் தமிழ் சினிமாவை நிச்சயம் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும்.

    English summary
    Vikram was supposed to act and even filmed for a few scenes for Mani Ratnam’s Bombay, but couldn’t continue filming because he couldn’t shave off his beard, which he maintained for another movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X