அருண் விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!

மாஃபியா படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடிக்கவுள்ள 30வது படத்தின் டைட்டில் நாளை வெளியாகிறது. நினைத்தலே படத்தை இயக்கிய குமரவேலன் இந்த படத்தை இயக்குகிறார்.

சென்னை: நடிகர் அருண் விஜய்யின் 30வது படத்தின் டைட்டில் நாளை வெளியாகவுள்ளது.

அஜித்தின் என்னை அறிந்தால் படம் தான் அருண் விஜய்க்கு நல்லதொரு கம்பேக்காக அமைந்தது. அந்த படத்தில் வில்லன் விக்டர் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை அருண் விஜய் வெளிப்படுத்தியிருந்தார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்து வரும் அருண் விஜய், அடுத்ததாக குமரவேலன் இயக்கத்தில் நடிக்கிறார்.

18 வயது

18 வயது

நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய், 18 வயதிலேயே முறை மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானார். 41 வயதாகும் அருண் விஜய், பல படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும், பாண்டவர் பூமி படம் மட்டுமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

விஜய் அட்வைஸ்

விஜய் அட்வைஸ்

நடிப்பதை முழுவதுமாக கைவிட்டு விடலாம் என நினைத்த அருண் விஜய்க்கு, நடிகர் விஜய் சொன்ன வார்த்தை தான் இன்ஸ்பிரேஷனாக அமைந்தது என்றும், அவரால் தான் மீண்டும் நடிக்க வந்தேன் என்றும் அருண் விஜய் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அஜித் படம்

அஜித் படம்

ஹீரோவாக நடித்து வந்தாலும், படங்கள் எதுவும் சரியாக ஓடுவதில்லை என வருத்தப்பட்டுக் கொண்டிருந்த அருண் விஜய்க்கு, அஜித்தின் என்னை அறிந்தால் படம், மிகப்பெரிய கம்பேக்காக அமைந்தது. அதாரு அதாரு பாடலில் அஜித்துடன் அருண் விஜய் ஆடும் ஆட்டத்தை என்றுமே தான் மறக்க முடியாது எனவும் அருண் விஜய் கூறியுள்ளார்.

தடம்

தடம்

என்னை அறிந்தால் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியான குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம், சாஹோ உள்ளிட்ட படங்கள் அருண் விஜய்க்கு சினிமாவில் ஏறுமுகமாகவே உள்ளன. அதிலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான தடம் படத்தில் அருண் விஜய் இரண்டு கெட்டப்புகளில் நடித்து அசத்தியிருந்தார். படத்தின் கதைக்களம் வித்தியாசமாக இருந்ததால், அருண் விஜய்க்கு மிகப்பெரிய இடத்தை தமிழ் சினிமாவில் தடம் கொடுத்துள்ளது.

ஏவி 30

41 வயதாகும் அருண் விஜய் தற்போது தான் 30வது படத்திலேயே நடிக்கவுள்ளார். தந்தை விஜயகுமாரின் தயாரிப்பில் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கும் புதிய படத்தில் அருண் விஜய் நடிக்கும் 30வது படத்தின் தலைப்பு நாளை அறிவிக்கப்படுகிறது. நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் உள்ளிட்ட படங்களை குமரவேலன் இயக்கியுள்ளார். குற்றம் 23 படத்திற்கு பிறகு மீண்டும் காக்கி யூனிஃபார்ம் போட்டு அருண் விஜய் இந்த படத்தில் நடிக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X