ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாள்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்.. உலகளவில் டிரெண்டான #HappyBirthdayNTR
ஹைதராபாத்: என்.டி.. ராமாராவின் பேரனும் பிரபல டோலிவுட் நடிகருமான ஜூனியர் என்.டி.ஆர் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை டோலிவுட் ரசிகர்கள் டிவிட்டரில் #HappyBirthdayNTR என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் ஜூனியர் என்.டி.ஆருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஹேப்பி பர்த்டே தாரக்
மிகப்பெரிய சினிமா குடும்பத்தின் வாரிசான ஜூனியர் என்.டி.ஆர் 1983ம் ஆண்டு மே 20ம் தேதி என்.டி.ஆரின் மகனும் நடிகருமான நந்தமுரி ஹரிகிருஷ்ணாவுக்கு மகனாக பிறந்தார். தாத்தாவை போலவே டோலிவுட்டில் தனக்கென தனி ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கும் அண்ணன் தாரக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ராவண மகாராஜ்
சிறுவயதிலேயே தேசிய விருது பெற்ற ராமாயணம் படத்தில் நடித்த ஜூனியர் என்.டி.ஆர் ராஜமெளலியின் இயக்கத்தில் கடந்த 2001ம் ஆண்டு ஸ்டூடன்ட் நம்பர் 1 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆக்ஷனில் அசத்தி பல படங்களில் நடித்து வந்த ஜூனியர் என்.டி.ஆர்., 2017ல் வெளியான ஜெய் லவ குசா படத்தில் ராவண மகாராஜ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

திணறும் டிவிட்டர்
ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் கொமரம் பீம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் உருவாக்கிய பிறந்தநாள் ஹாஷ்டேக்குகளில் 13 மில்லியனுக்கும் மேல் டிவிட்டுகள் குவிந்து டிவிட்டரை திணறடித்து வருகின்றன. மேலும், சமூக வலைதளம் முழுவதும் அண்ணனின் ஆட்சி தான்.

சகலகலா வல்லவன்
ஆக்ஷன், எமோஷன், பாடும் திறமை, சமூக அக்கறை, நகைச்சுவை திறன், நடனம், சமையல் கலை மற்றும் தொகுப்பாளர் என டோலிவுட்டின் சகலகலா வல்லவனாக ஜூனியர் என்.டி.ஆர் கலக்கி வருகிறார். ராஜமெளலியின் இரத்தம் ரணம் ரெளத்திரம் படத்திற்கான தமிழ் டப்பிங்கையும் அண்மையில் ஜூனியர் என்.டி.ஆரே பேசியிருந்தது வைரலானது குறிப்பிடத்தக்கது.

ரகுல் ப்ரீத் சிங் வாழ்த்து
நள்ளிரவு முதலே ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான நன்னக்கு பிரேமத்தோ எனும் ரொமான்டிக் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஜோடியாக நடித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குஷ்பு வாழ்த்து
எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான யமடொங்கா படத்தில் யமனின் மனைவியாக நடிகை குஷ்பு நடித்திருப்பார். இன்று பிறந்தநாள் காணும் ஜூனியர் என்.டி.ஆருக்கு டோலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி கோலிவுட் பிரபலமான குஷ்புவும் வாழ்த்து கூறியுள்ளார்.

யங் டைகர்
ஜூனியர் என்.டி.ஆர்., அண்ணா, தாரக், யங் டைகர் என பல பெயர்களால் அழைக்கப்படும் ராமாராவ் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். டோலிவுட் முதல் பாலிவுட் பிரபலங்கள் வரை ஜூனியர். என்.டி.ஆரை வாழ்த்தி வருகின்றனர். கொமரம் பீமின் ஆக்ரோஷத்தை அடுத்த ஆண்டு ரிலீசாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் காணலாம்.


Click it and Unblock the Notifications











