மங்காத்தா 2 ... வெங்கட் பிரபுவிற்கு ஹர்பஜன் சிங் வைத்த கோரிக்கை
சென்னை : அஜித்தின் 50 வது படமாக வெளிவந்தது மங்காத்தா படம். வெங்கட் பிரபு இயக்கிய இந்த படம் அஜித்தின் திரையுலக வரலாற்றில் முக்கிய படமாக அமைந்தது. அஜித் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட படமும் இது தான்.
மங்காத்தா படம் ரிலீஸ் ஆகி 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இருந்தாலும் இதுவரை இந்த படம் ஏற்படுத்திய மாஸை இதுவரை வேறு எந்த படமும் முறியடிக்கவில்லை. இந்த படத்தில் அஜித்தின் சால்ட் அன்ட் பெப்பர் லுக், அஜித் அணிந்து வரும் செயின், டாலர் என அனைத்தும் பேசப்பட்டது.
ஆரம்பத்தில் ஸ்டைலாக காட்டப்படும் இந்த செயினையும் முக்கிய ரோலில் நடிக்க வைத்திருப்பார் வெங்கட் பிரபு. இந்த படத்தின் பாடல்களும் அஜித்தின் ஹிட் பாடல் லிஸ்டில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

மங்காத்தா பார்ட் 2
மங்காத்தா படத்தின் 10 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வெங்கட் பிரபுவிடம், உடனடியாக ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என்றால் எந்த படத்தை கூறுவீர்கள் என கேட்டதற்கு, மங்காத்தா என பதிலளித்தார்.

ஹர்பஜன் சிங்கும் இணைவாரா
இதனால் வெங்கட் பிரபு - அஜித் இணையும் மங்காத்தா 2 எப்போது வெளிவரும் என அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் இணைவாரா, இது பற்றிய அறிவிப்பு எப்போது வரும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ஃபிரண்ட்ஷிப் டிரைலர்
ஹர்பஜன் ஹீரோவாக அறிமுகமாகும் ஃபிரண்ட்ஷிப் படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இதனை நடிகர் ஆரியா ட்விட்டரில் வெளியிட்டார். இதனை ஏராளமான நடிகர்கள், டைரக்டர்கள் பாராட்டி, பகிர்ந்து வருகின்றனர். அப்படி கொண்டாடியவர்களில் டைரக்டர் வெங்கட் பிரபுவும் ஒருவர்.

கேட்டதா சொல்லுங்க
இதற்காக ட்விட்டரில் வெங்கட் பிரபுவுக்கு நன்றி தெரிவித்த ஹர்பஜன் சிங், மங்காத்தா செகண்ட் பார்ட் பண்ணா தல கிட்ட கேட்டதா சொல்லுங்க என கேட்டுள்ளார். இதற்கு வெங்கட் பிரபு என்ன பதில் சொல்ல போகிறார் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

கூட்டிட்டு போப்பா
ஃபிரண்ட்ஷிப் படத்தின் டிரைலரை வெளியிட்டதற்காக ஆரியாவிற்கு தமிழில் நன்றி சொல்லி உள்ளார் ஹர்பஜன் சிங். அதில், நன்றி கபிலன். அந்த சைக்கிளில் என்னை ஒரு ரவுண்ட் கூட்டிட்டு போப்பா என கேட்டுள்ளார். தமிழில் ஹர்பஜன் வெளியிட்ட இந்த பதிவுகள் வைரலாகி வருகின்றன.
Recommended Video

லாஸ்லியாவுக்கு ஜோடி
ஹர்பஜன் நடித்துள்ள ஃபிரண்ட்ஷிப் எமோஷன்ஸ், நகைச்சுவை, கிரிக்கெட், மாஸ் என அனைத்தும் கலந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் லாஸ்லியா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











