இந்த வெட்டு புலிக்கு ஏத்த வெட்டு கிளி நீங்க தான் ஜீ… சந்தானத்தை கலாய்த்த ஹர்பஜன் சிங்!
சென்னை : டிக்கிலோனா திரைப்படத்தில் நடித்துள்ள ஹர்பஜன்சிங் தனது கேரக்டர் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இப்படம் ஜீ-5 ஓடிடி தளத்தில் நேரடியாக செப்டம்பர் 10ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தில் சந்தானம் 3 விதமான கெட்டப்பில் நடிக்கிறார்.

டிக்கிலோனா
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்த படத்தில் அனைகா, ஷெரின், யோகி பாபு, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

டைம் டிராவல்
சந்தானம் 3 கெட்டப்பில் நடிக்கும் டைம் டிராவல் நகைச்சுவை திரைப்படம் தான் டிக்கிலோனா. இப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இதில் 2027ம் ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டுக்கு வந்து தனது கல்யாணத்தை தடுத்து நிறுத்துவதற்கா சந்தானம் டைம் டிராவல் செய்வதாக கூறப்படுகிறது.

சந்தானம் 3 கெட்டப்
டிக்கிலோனா டிரைலரில் சந்தானம் மூன்று விதமான தோற்றத்தில் வருகிறார். ஆனால் அவை உண்மையில் 3 கெட்டப்பா அல்லது ஒரே ஆள் 3 காலங்களில் டைம் டிராவலால் மாறுகிறாரா என்பது தெரியவில்லை.

யுவன் சங்கர் ராஜா
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . இப்படத்தின் பாடல்கள் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் ஜீ-5 ஓடிடி தளத்தில் நேரடியாக செப்டம்பர் 10ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த வெட்டு புலிக்கு ஏத்த வெட்டு கிளி
இந்நிலையில், டிக்கிலோனா படத்தில் திரைப்படத்தில் நடித்துள்ள ஹர்பஜன்சிங் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்த வெட்டு புலிக்கு ஏத்த வெட்டு கிளி பார்த்தா iamsanthanam ஜீ, எப்பிடி இருக்கீங்க. #Dikkilona படம் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! படம் ரிலீஸ்க்கு ரெடி.நான் இதுல யாருன்னா நீங்களே பாருங்க என்று கூறியுள்ளார். இப்படத்தில் சர்தேவ் சிங் என்ற ஹாக்கி வீரராக நடித்துள்ளார் ஹர்பஜன் சிங்

பிரண்ட்ஷிப்
பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தி சதீஷ், வெங்கட்சுபா, வேல்முருகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, டி.எம்.உதயக்குமார் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











