ஹரி இயக்கத்தில் பரத்

By Staff
Click here for more images

வேல் படத்தின் வெற்றியால் குஷியாகியிருக்கும் இயக்குநர் ஹரி அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி விட்டார். இப்படத்தில் பரத் நடிக்கவுள்ளார்.

சூர்யா, ஆசின், வடிவேலு ஆகியோரது நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகியுள்ள வேல், சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.

இந்த சந்தோஷச் சூட்டோடு அடுத்த படத்திற்கு கிளம்பி விட்டார் இயக்குநர் ஹரி. அவரது அடுத்த படத்தின் நாயகன் பரத்.

இதுகுறித்து ஹரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜின்னா கிரியேஷன்ஸ் எம்.ஏ.ஜின்னா இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்துக்கான கதையை ரெடி செய்து விட்ேடன். இருப்பினும் இதற்கு முழு வடிவம் கொடுக்க 3 மாதங்களாகும். மார்ச் மாதம் இப்படத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளேன்.

எனது மற்ற படங்களைப் போலவே இதுவும் குடும்ப சென்டிமென்ட் மற்றும் காமெடி கலந்த அதிரடிப் படமாக இருக்கும்.

இப்படத்தில் முன்னணி நாயகி ஒருவர்தான் ஹீரோயினாக நடிப்பார். அதுதான் எனக்கும் நல்லது, தயாரிப்பாளருக்கும் நல்லது.

நான் கிரியேட்டிவ் இயக்குநர் கிடையாது என்பதை ஒத்துக் கொள்கிறேன். தயாரிப்பாளரின் பணத்தில் விதம் விதமான கதைகளை பரீட்சித்துப் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. தயாரிப்பாளரக்ளின் விருப்ப இயக்குநராக இருக்கவே நான் விரும்புகிறேன்.

வேல் படத்தின் கதை மிகவும் ஸ்டிராங்கானது என்று நான் சொல்ல மாட்டேன். இருந்தாலும் நடிகர், நடிகைகளின் நடிப்பு, திரைக்கதையின் விறுவிறுப்பு ஆகியவை வேல் படத்தை பெரிய வெற்றிப் படமாக்கியுள்ளன என்ரார் ஹரி.

நாயகன் பரதத்தும் பேட்டியின்போது உடன் இருந்தார். ஹரியுடன் இணைவது சந்தோஷம் தருவதாக அவர் தெரிவித்தார்.

More from Filmibeat

Read more about: bharath hari
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X