HBD Harish Kalyan: பெண்களின் கனவு நாயகன்! தல தோனியின் ஹீரோ! தாராள பிரபு ஹரிஸ் கல்யாணுக்கு பிறந்தநாள்

சென்னை: பெண்களின் தூக்கத்தைக் கெடுத்த கனவு நாயகனாக வலம் வரும் கதாநாயகர்களில் ஹரிஸ் கல்யாணுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. ஆனால் அவர் தன்னை பெண்களின் கனவு நாயகனாக மட்டும் உயர்த்திக் கொள்ளாமல் தனது அசாத்திய நம்பிக்கை மூலம் சினிமாதுறையில் சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் ஒரு முன் உதாரணமாக மாறி நட்சத்திரமாக மிளிர்கின்றார். ஹரிஸ் கல்யாண் இன்று அதாவது ஜூன் 29ஆம் தேதி தனது 34வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். அவரது சினிமா வாழ்க்கை குறித்தும், சொந்த வாழ்க்கை குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம்.

ஹரிஸ் கல்யாணுக்கு சினிமா ஆசை என்பது தனது சின்ன வயதில் இருந்தே ஏற்பட்டுவிட்டது. தனது பள்ளிப்படிப்பை படித்துக் கொண்டு இருக்கும்போதே நான் சினிமாவில் நடிக்கப்போகின்றேன் என பெற்றோரளிடம் கூறியுள்ளார். அவர்களோ தலையில் ஒரு கொட்டு வைத்து, போய் முதலில் படி அப்பறம் பாத்துக்கலாம் எனக் கூறியுள்ளனர். பள்ளிப்படிப்பை முடித்த ஹரிஸ் கல்யாணை வீட்டில் அனைவரும் சேர்ந்து பொறியியல் சேர்த்துவிட, கொஞ்ச நாள் பொறியியல் படித்துவிட்டு, " இது எனக்கு செட் ஆகாது" என டிஸ்-கண்டின்யூ செய்துவிட்டார். அதன்பின்னர் விஸ்காம் சேர்ந்து படித்துக் கொண்டு இருக்கும்போதே சினிமா வாய்ப்பு வந்தது.

Harish Kalyan

வந்த வாய்ப்பினை தவறவிடக்கூடாது என்ற காரணத்தால், 2010ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற படத்தில் அமலா பாலுக்கு ஜோடியாக நடித்தார். படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியதால் ஹரிஸ் கல்யாணின் குடும்பமே அதிர்ந்து போனார்கள். அதன் பின்னர் தொடர்ந்து நடித்து வந்தாலும் இவரது நடிப்பில் வெளியான பொறியாளன் மற்றும் வில் அம்பு படங்கள் மக்கள் மத்தியில் ஓரளவுக்கு கவனம் பெற்றாலும், வணிக ரீதியாக வெற்றிப் படமாக மாறவில்லை.

அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு மூலம் எண்ட்ரி கொடுத்து இறுதிப் போட்டிவரை சென்று ரசிகர்கள் மனதில் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டு மீண்டும் சினிமா வேலைகளில் வேகமாக ஈடுபட்டார். குறிப்பாக பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆனது மட்டும் இல்லாமல் பாடல்கள் ஹரிஸ் கல்யாணை காதல் மன்னனாக மாற்றியது. இப்படியான நிலையில் தாராள பிரபு என்ற படத்தில் நடித்து, முக்கியமான கருத்தினை வெளிப்படுத்த நினைத்த இயக்குநருக்கு பக்கபலமாக் நின்றார். இதனிடையே வெளியான தனுசு ராசி நேயர்களே படத்தில் பக்கா காமெடி ட்ரீட் கொடுக்க முயற்சித்திருப்பார்.

Harish Kalyan

தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் அவருக்கு அங்கு பெரிய ஹிட் எதுவும் அமையவில்லை. அனாலும் தமிழில் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து அதில் நடித்தும் வருகின்றார். இவரது நடிப்பில் வெளியான ஓ மணப்பெண்ணே படம் ஒரு ஃபீல் குட் மூவியாக இன்றும் உள்ளது. தல தோனி சினிமா தயாரிக்க முடிவு செய்தபோது தமிழில் அவர் செலக்ட் செய்த முதல் கதாநாயகன் ஹரிஸ் கல்யாண் தான். லெட்ஸ் கெட் மேரிட் படம் சுமாரான வெற்றியைப் பெற்றாலும் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான பார்க்கிங் படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இவர் கடந்த 2022ஆம் ஆண்டு நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அடுத்து இவரது நடிப்பில் டீசல், நூறு கோடி வானவில், லப்பர் பந்து ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதில் ரப்பர் பந்து படத்தில் ஹரிஸ் கல்யான் தீவிரமான விஜயகாந்த் ரசிகராக நடிக்கின்றார். தொடர்ந்து ஃபீல் குட் படங்களைக் கொடுக்கும் ஹரிஸ் கல்யாண் இன்று தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். அவருக்கு ஃபிலிமி பீட் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X