பார்க்கிங் இயக்குநருடனான சிம்பு படம் ட்ராப் இல்லையா?.. தேசிய விருது வாங்கணுமாம்.. ஹீரோ சொன்ன குட் நியூஸ்
சென்னை: சிம்புவை வைத்து பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் ஒரு படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாகவே அப்படம் ட்ராப்பாகிவிட்டதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க 2023ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை பார்க்கிங் திரைப்படம் பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி சிறந்த திரைக்கதைக்கான விருதை இயக்குநர் ராம்குமாரும், சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்.எஸ்.பாஸ்கரும் பெறுகிறார்கள். சூழல் இப்படி இருக்க ராம்குமார் - சிம்பு படம் பற்றி பார்க்கிங் ஹீரோ பேசியிருக்கிறார்.
சிம்பு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் தரமான கம்பேக்கை கொடுத்திருக்கிறார். அவர் நடித்த தக் லைஃப் படம் தோல்வியை சந்தித்தாலும்; அப்படத்தின் ஹீரோ கமல்ஹாசன் என்பதால் எஸ்டிஆருக்கு பெரிதான சேதாரம் இல்லை என்றே பலரும் சொல்கிறார்கள். அடுத்ததாக அவர் வெற்றிமாறன் இயக்கத்திலும், அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி ஆகியோரின் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
பார்க்கிங் இயக்குநருடன்: இதற்கிடையே பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டானார் சிம்பு. அதுகுறித்த அறிவிப்பும் ஒரு போஸ்டருடன் வெளியானது. அந்தப் போஸ்டரில் எஸ்டிஆர் வின்டேஜ் சிம்புவாக காட்சியளித்தார். அதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும்; எஸ்டிஆரின் லைன் அப்பே வேறு மாதிரி இருக்கிறது என உற்சாகத்தில் இருந்தார்கள்.

படம் ட்ராப்?: ஆனால் அவர்களது உற்சாகத்தை குறைக்கும்படியான தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளியாகிக்கொண்டிருக்கிறது. அதாவது இரண்டு பேரும் இணையவிருந்த படம் ட்ராப்பாகிவிட்டதாகவும்; கால்ஷீட் பிரச்னையால் அப்படத்திலிருந்து சிம்பு வெளியேறிவிட்டார் என்றும் பேசப்பட்டது. இதன் காரணமாக அட் மேனின் ரசிகர்கள் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தார்கள்.
பார்க்கிங்கிற்கு விருது: சூழல் இப்படி இருக்க நேற்று 71வது தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதில் 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படமாக பார்க்கிங் படம் விருது பெறுகிறது. அதுமட்டுமின்றி சிறந்த திரைக்கதையாசிரியருக்கான விருதை ராம்குமாரும், சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்.எஸ்.பாஸ்கரும் பெறுகிறார்கள். இப்படம் மூன்று தேசிய விருதுகள் அள்ளியிருப்பது ஒட்டுமொத்த தமிழ் திரைத்துறைக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹரிஷ் கல்யாண் கருத்து: இந்நிலையில் பார்க்கிங் பட ஹீரோ தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எஸ்டிஆர் - ராம்குமார் இணையும் படத்துக்கு அடுத்த வருடம் தேசிய விருது கிடைத்தால் அதைவிட பெரிய சந்தோஷம் என்ன இருந்துவிட முடியும்" என குறிப்பிட்டார். இதனைப் பார்த்த ரசிகர்களோ, 'ஹரிஷ் கல்யாண் சொல்வதை பார்த்தால் சிம்பு - ராம்குமாஅர் படம் ட்ராப்பாகவில்லையோ என்ற கருத்தை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











