ஷாருக்கான் மாதிரி.. இல்ல இல்ல சிந்து சமவெளி கெட்டப்.. ரசிகர்களிடம் உருளும் ஹரிஷ் கல்யாண் தலை!

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் தந்து புது கெட்டப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த லுக்கை பார்த்த அவரது ரசிகர்கள் பாராட்டியும், சில நெட்டிசன்கள் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் லாக் டவுனுக்கு முன்னதாக வெளியான தாராள பிரபு திரைப்படம் பாராட்டுக்களை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

தியேட்டர்கள் மூடல்

தியேட்டர்கள் மூடல்

கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தாராள பிரபு திரையரங்குகளில் வெளியானது. விக்கி டோனர் படத்தின் ரீமேக்கான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்கள் குவிந்தன. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், தாராள பிரபு படத்தின் ஓட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே தடைபட்டது.

50வது நாள்

50வது நாள்

பின்னர் அமேசான் பிரைமில் ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு எந்தவொரு சிக்கலும் இன்றி தாராளமாக ரிலீசானது. கோலிவுட் ஹீரோயின்கள், பிக்பாஸ் பிரபலங்கள் என பலரும் அந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தனர். இந்நிலையில், தாராள பிரபு படம் ரிலீசாகி இன்றுடன் 50 நாட்கள் ஆனதாக ஹரிஷ் கல்யாண் பதிவிட்டுள்ளார்.

நியூ லுக்

நியூ லுக்

சலூன் கடைகள் திறக்கப்படாத நிலையில், தனது மீசையையும், தாடியையும் நன்றாக ட்ரிம் செய்த படி புது லுக்கிற்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் மாறி இருக்கிறார். தற்போது, தனது நியூ லுக் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, ரசிகர்கள் வாவ் என பாராட்டி வருகின்றனர்.

ஷாருக்கான் மாதிரி

ஷாருக்கான் மாதிரி

அதிலும் சில ரசிகர்கள், இது ஹரிஷ் கல்யாணா? நம்பவே முடியலையே.. அப்படியே ஷாருக்கான் மாதிரி தக தகன்னு மின்னுறீங்களே என ஏக போகத்துக்கும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். சில ரசிகர்கள் சிம்பிளாக நல்லா இருக்கு, சூப்பர், க்யூட் என கமெண்ட் செய்து ஹரிஷ் கல்யாணை குஷி படுத்தி வருகின்றனர்.

சூர்யா சார் நீங்களா

சூர்யா சார் நீங்களா

மேலும், பலர் சூர்யா மாதிரி இருக்கீங்க, அர்ஜுன் தாஸ் மாதிரி இருக்கீங்க, யாரு பாஸ் உங்க தம்பியா என ஹரிஷ் கல்யாண் ஏன் டா புது போட்டோவை போட்டோம் என யோசிக்கிற அளவுக்கு ட்ரோல்களாகவும், மீம்களாகவும் போட்டுத் தள்ளுகின்றனர். சிலர் உங்களுக்கு இந்த ஹேர் ஸ்டைல் செட் ஆகல என்றும் கலாய்த்து வருகின்றனர்.

சிந்து சமவெளி கெட்டப்

சிந்து சமவெளி கெட்டப்

சில நெட்டிசன்கள் ஹரிஷ் கல்யாணை ஓவராக ஓட்ட வேண்டும் என நினைத்து, ஹரிஷ் கல்யாண், அமலா பால் நடிப்பில் வெளியான சிந்து சமவெளி படத்தின் கெட்டப் என கமெண்ட் செய்து பங்கம் செய்து வருகின்றனர். 2010ம் ஆண்டு வெளியான அந்த படத்தின் மூலமாகத்தான் இருவரும் சினிமாவுக்கு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X