இந்த குட்டி ஸ்டார் யாருன்னு தெரியுதா!
சென்னை : தமிழ் சினிமாவில் இப்போது அதிக அளவு பெண் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள நடிகர் ஹரீஷ் கல்யாண் தெலுங்கிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
பியார் பிரேமா காதல் கூட்டணி இப்போது மீண்டும் இணையும் திரைப்படத்திற்கு ஸ்டார் என தலைப்பிடப்பட்ட நிலையில் கமல், ரஜினி என இரண்டு கெட்டப்பில் விட்ட ஃபர்ஸ்ட் போஸ்டர்கள் சமூக வலைதளத்தை இன்றுவரை கலக்கி வருகிறது
தமிழ் சினிமாவில் லவ் ஸ்டாராக இருக்கும் ஹரிஷ் கல்யாண் இப்பொழுது தனது சிறுவயது க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு பெண்களின் மனதைக் கொள்ளையடித்து வருகிறார்.

பிரியா பவானி சங்கர்
இப்போதுள்ள இளம் தலைமுறை பெண்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக இருந்து வரும் நடிகர் ஹரீஷ் கல்யாண் தொடர்ந்து காதல் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் முதன் முறையாக பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து ஓ மணப்பெண்ணே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஓ மணப்பெண்ணே
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று விஜய் தேவர்கொண்டாவின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த பெல்லி சூபுளு திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிவரும் ஓ மணப்பெண்ணே தமிழ் ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே கூட்டணி இணையும்
சுமாரான வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்த ஹரிஷ் கல்யாணுக்கு முதல் வெற்றிப் படமாக அமைந்த பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்குனர் இளன் இயக்கி இருக்க யுவன்சங்கர்ராஜா முதல்முறையாக தயாரித்த படம் இதுவேயாகும். இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் அதே கூட்டணி இணையும் படத்திற்கு ஸ்டார் என பெயரிடப்பட்டிருக்கிறது.

ஆரம்பத்திலேயே பட்டையை கிளப்பி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் அன்று வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பில்லா ரஜினிகாந்த் ஸ்டைலிலும், அதைத்தொடர்ந்து சிகப்பு ரோஜாக்கள் கமல்ஹாசன் கெட்டப்பிலும் அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு ஆரம்பத்திலேயே பட்டையை கிளப்பியது.

சிறுவயது புகைப்படத்தை
ஓ மணப்பெண்ணே, ஸ்டார், கசடதபற என மூன்று திரைப்படங்களை இப்போதைக்கு கைவசம் வைத்திருக்கும் ஹரிஷ் கல்யாண் வளர்ந்து வரும் நடிகர்களில் அதிக அளவு பெண் ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரும் பார்த்திராத சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

குட்டி ஹரிஷ் கல்யாணை
போட்டோ காப்பியாக இருக்கும் அந்த புகைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மிகவும் சின்ன பையனாக இருக்க க்யூட்டான சிரிப்பு சிரித்தவாறு போஸ் கொடுத்திருக்கும் அழகிய புகைப்படத்தை 90ஸ் நாட்டீஸ் நினைவுகள் என கேப்ஷன் போட்டு பதிவிட்டு இருக்க இந்த போட்டோவை பார்த்த பெண்கள் பலரும் காதல் அம்பு விட்டு குட்டி ஹரிஷ் கல்யாணை வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











