ஹீரோ .. ஹீரோ ..

By Staff

முதல் படத்தில் திறமையை நிரூபித்தும் சோபிக்க முடியாத பின்னணி பாடகர் ஹரீஷ் ராகவேந்திராவுக்கு இப்போது மேலும் ஒரு படத்தில்ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ் திரை உலகில் சமீப காலத்தில் இரண்டே இரண்டு பின்னணிப் பாடகர்களால் தான் நடிகர்களாக ஜொலிக்க முடிந்தது. மலேஷியாவாசுதேவன் வில்லனாக அறிமுகமாகி ஒரு ரவுண்டு வந்தார்.

இதன் பிறகு எஸ்.பி. பாலசுப்பிரமணியன் நடிக்க வந்தார். அவரும் தன் பங்கிற்கு கோலிவுட்டை தன்னால் ஆன மட்டும் நிரப்பினார்.இப்போதும் தெலுங்கு, கன்னடம், தமிழ் என அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார்.

இதற்குப் பிறகு யுகேந்திரன், வெங்கட் பிரபு, எஸ்.பி.பி.சரண் என வரிசையாக இளம் பின்னணிப் பாடகர்கள் களத்தில் குதித்து பார்த்தனர்.ஆனால் யாராலும் ஒரு படத்திற்கு மேல் தாண்ட முடியவில்லை.

ஆனாலும் ஒரு கை பார்த்து விடும் ஜோருடன் இளம் பாடகரான ஹரீஷ் ராகவேந்திரா களத்தில் குதித்தார். அருண் பாண்டியன் தயாரித்து,இயக்கிய "விகடன் படத்தின் முலம் இவர் கதாநாயகனாக அறிமுகமானார்.

இந்தப் படத்தால் ஒரு அழகான தலைப்பு தான் வேஸ்ட் ஆனது. படத்தில் ஹரீஷ் நன்றாகவும் நடித்திருந்தார். ஆனால், அருண்பாண்டியனின்தயவால் படம் ஊத்திக் கொண்டது.

அதன் பிறகு பாட்டே போதும் என்று சினிமாவிலிருந்து விலகியே நின்றார் ஹரீஷ்.

இந் நிலையில் தான் மீண்டும் ஹீரோ வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது. பார்வதி பிலிம்ஸ் சார்பில் ராதாகிருஷ்ணன் தயாரிக்கும்"கற்பனை என்ற படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை "ஜே.ஜே.காலனி மூலம் அறிமுகமான அஷோக் ராஜ் டைரக்ட் செய்கிறார். மற்றொரு கதாநாயகனாக சுதி நம்பியார்நடிக்கிறார். இவர் தான் படத்துக்கு கதை எழுதியிருக்கிறார்

வில்லனாக அஜித் நாயர் நடிக்கிறார். (படத்தில் நடிப்பதெல்லாம் கேரளாக்காரர்கள்.. காசு குடுத்து படம் பார்க்க மட்டும்தமிழ்நாட்டுக்காரர்கள் வந்துடனும்ப்பா..)

கற்பனையின் விளைவால் காதல் உணர்வுகளை தொலைத்து விட்டு வாழ்க்கையை இழந்த ஒரு பெண்ணின் கதையாம் இது. (என்னசொல்றாங்கனே புரியலே)

இதில் கதாநாயகியாக நடிப்பது "சூப்பர்டா படத்தில் கவர்ச்சி அபிஷேகம் செய்த, அனு தான்.

கூர்க், கொடைக்கானல், ஹைதராபாத், சென்னை என சூட்டிங் நடக்கப் போகிறது. பாடல்களுக்காக மலேசியாவுக்கும் போகிறார்கள்.படத்தில் மொத்தம் 6 பாடல்களாம். ஹரீஸ் பாடியிருக்கிறாரா என்று தெரியவில்லை.

இந்தப் படம் மூலமாவது ஹரீஷ் ராகவேந்திராவுக்கு "லக் அடித்தால் சரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X