TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
தன்னால் முடியாததை தமிழக அரசின் தலையில் இறக்கி வைத்த விஷால்
சென்னை: தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தன்னால் முடியாத காரியத்தை தமிழக அரசின் தலையில் இறக்கி வைத்துவிட்டார்.
எந்த புதுப்படம் வெளியானாலும் ரிலீஸான சில மணிநேரத்தில் அதை இணையதளத்தில் அப்லோடு செய்துவிடுகிறது தமிழ் ராக்கர்ஸ். அந்த தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை கண்டுபிடித்து சிறையில் அடைப்பேன் என்று தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் ஒரு காலத்தில் சவால் விட்டார்.
இன்னும் தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை சிறையில் அடைத்தபாடில்லை.
விஷால்
விஷால் தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை பிடிக்காததால் அவருக்கு அந்த இணையதளத்தில் பங்கு உள்ளதாக சில தயாரிப்பாளர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அந்த சந்தேகத்தை சிலர் வெளிப்படையாகவே மீடியாக்களிடம் தெரிவித்துவிட்டனர்.
தமிழ் ராக்கர்ஸ்
தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை பிடிப்போம் என்ற நம்பிக்கையை விஷால் இழந்துவிட்டார் போன்று. தான் கடவுளாக பார்க்கும் தமிழக அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸை ஒரே நாளில் ஒழித்துக்கட்ட முடியும் என்று தற்போது பேட்டி அளித்துள்ளார் விஷால்.
நடவடிக்கை
புதுப்படங்களை தமிழ் ராக்கர்ஸ் ஆட்கள் உடனுக்குடன் வெளியிடுவதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் விஷால்.
கலாய்
என்ன விஷால் சார், தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை பிடிக்க முடியவில்லையா?. அதனால் தான் நீங்கள் எஸ்கேப் ஆக தமிழக அரசை கை காட்டிவிடுகிறீர்களா என்று நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.