ரசிகர்களின் அன்பான அண்ணா...மாஸ் ஹீரோ...ஹேப்பி பர்த் டே ராம் சரண்

சென்னை : தெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் இன்று தனது 37 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரணின் நிஜப் பெயர், கொனிதேலா ராம் சரண் தேஜா. தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோவான இவர், நடிகர், தயாரிப்பாளர், தொழிலதிபர் என பல முகங்களைக் கொண்டவர். புகழ் மற்றும் வருமானத்தின் காரணமாக Forbes India வின் 100 பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்தவர்.

மாஸ் ஹீரோவாக்கிய மகதீரா

மாஸ் ஹீரோவாக்கிய மகதீரா

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ராம் சரணும் ஒருவர். Chirutha என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ராம் சரண். முதல் படமே பிரம்மாண்ட வெற்றி பெற்று, வசூலை வாரி குவித்தது. இதன் காரணமாக இரண்டாவது படமே டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் மகதீரா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கு சினிமா வரலாற்றிலேயே அதுவரை இல்லாத அளவிற்க வசூல் சாதனையை இந்த படம் படைத்தது. பல விருதுகளையும் இந்த படம் பெற்றது.

இதெல்லாம் தெரியுமா இவருக்கு

இதெல்லாம் தெரியுமா இவருக்கு

சென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்தவரான ராம் சரண், மிகப் பெரிய கலைக்குடும்பத்தின் வாரிசாவார். அல்லு அர்ஜுன், பவன் கல்யாண், நாகேந்திர பாபு, அல்லு அரவிந்த், வருண் தேஜ் உள்ளிட்டோரின் உறவினர். சிறு வயதிலேயே குதிரையேற்ற பயிற்சி பெற்ற ராம் சரண், விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தற்போது சினிமா தயாரிப்பு மட்டுமின்றி பல தொழில்களில் கலக்கி வருகிறார்.

அடுத்தடுத்த மாஸ் படங்கள்

அடுத்தடுத்த மாஸ் படங்கள்

Racha, Naayak, Yevadu, Dhruva, Rangasthalam என வரிசையாக மாஸ் ஹிட் கொடுத்து தன்னை கமர்ஷியல் வெற்றி ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டார் ராம்சரண். லேட்டஸ்டாக ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து டைரக்டர் ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 படத்தில் நடித்து வருகிறார். அதோடு அப்பா சிரஞ்சீவியுடன் சேர்ந்து ஆச்சார்யா படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்த படத்தை இவரே தயாரித்துள்ளார்.

நிஜத்திலும் ஹீரோ

நிஜத்திலும் ஹீரோ

படங்களில் மட்டுமல்ல நிஜத்திலும் இவர் ஹீரோவாக பல சமூக பணிகளை செய்து வருகிறார். வருடந்தோறும் தவறாமல் சபரிமலை யாத்திரை செல்லும் ராம் சரண், ரத்த தானம் முகாம்களை நடத்தி வருகிறார். கொரோனா சமயத்தில் ஆக்சிஜன் வங்கிகளை துவக்கி, அதன் மூலம் பல மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கி வந்துள்ளார்.

ராம் சரணின் சம்பளம் இவ்வளவா

ராம் சரணின் சம்பளம் இவ்வளவா

ராம் சரண் ஒரு படத்திற்கு 35 கோடிகள் சம்பளமாக வாங்கி வந்தார். ஆனால் ஆர்ஆர்ஆர் படத்திற்கு அவருக்கு 43 கோடிகள் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. கெளதம் தின்னனுரி கூட்டணியில் ராம் சரண் அடுத்து நடிக்க போகும் படத்திற்கு அவருக்கு 100 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். ராம் சரணின் தற்போதைய சொத்து மதிப்பு 1300 கோடி. புதிய வகை கார் வாங்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர் ராம் சரண். உலகில் உள்ள அத்தனை வகை சொகுசு கார்களும் இவரிடம் உள்ளதாம்.

ஹேப்பி பர்த்டே அண்ணா

ஹேப்பி பர்த்டே அண்ணா

ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். இதற்காக Anna என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. தமிழ் ஹீரோக்களை ரசிகர்கள் தலைவா, வருங்கால சிஎம் என சொல்லி புகழ்ந்து வரும் நிலையில் தெலுங்கு ரசிகர்கள் ராம் சரணை அன்புடன் அண்ணா என சொல்லி வாழ்த்தி வருவது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X