பிதாமகனின் பிறந்தநாள்.. டெடிகேஷனின் மொத்த உருவம் சியான் விக்ரம்.. டிரெண்டாகும் #HBDChiyaanVikram

சென்னை: என் காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான சியான் விக்ரமின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Recommended Video

Exclusive: Cobra TRAILER | Vikram | Ajay Gnanamuthu

சேது, பிதாமகன், காசி, அந்நியன், ஐ படங்களில் சினிமாவுக்கு உயிரை கொடுத்து நடிக்கும் சிறந்த கலைஞனை தமிழ் சினிமா கண்டிருக்கிறது.

தில், ஜெமினி, தூள், சாமி என பல படங்களில் ஸ்டைலாகவும் மாஸாகவும் தன்னால் வெற்றி கொடுக்க முடியும் என நிரூபித்துக் காட்டிய மகா கலைஞனின் பிறந்தநாளை தமிழ் சினிமா ரசிகர்கள் #HBDChiyaanVikram என்ற ஹாஷ்டேக்குடன் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகனின் தலைவன்

சியான் விக்ரம் சினிமா வாழ்க்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் சிறந்த மனிதநேயம் கொண்டவர். வெற்றி, தோல்விகளை தாண்டி எடுத்துக் கொண்ட கதாபாத்திரத்திற்கு எந்தளவுக்கு உயிர் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு உயிர் கொடுத்து நடிக்கும் கலைஞன், ரசிகனின் தலைவனாகவும் தன்னை நிரூபித்து காட்டி இருக்கிறார்.

பிறந்தநாள் பரிசு

நடிகர் விக்ரமின் பிறந்த நாளை நேற்று முதலே கோப்ரா டீம் கொண்டாட தொடங்கி விட்டது. பிறந்த நாள் காமன் டிபியை கோப்ரா பட இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு டிரெண்ட் செய்தார். இந்நிலையில், பிறந்த நாளை முன்னிட்டு, கோப்ரா படத்தின் லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

தூண்

சிவாஜி கணேசன், கமல்ஹாசன் வரிசையில் தமிழ் சினிமாவில் உலகத் தரமான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு உன்னதமான கலைஞனாக சியான் விக்ரம் திகழ்கிறார். சேது படத்தில் மனநல நோயாளியாகவும், பிதாமகன் படத்தில் வெட்டியானாகவும் காசி படத்தில் கண் தெரியாத பாடகராகவும் நடித்து அசத்திய விக்ரம் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத தூணாக இருக்கிறார்.

சிம்ரன் வாழ்த்து

கோப்ரா டீமின் லைவ் வீடியோவில் பல பிரபலங்கள் சியான் விக்ரம் பிறந்த நாளுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விக்ரம் நடிப்புக்கு தேசிய விருது கிடைத்த பிதாமகன் படத்தில் நடித்துள்ள நடிகை சிம்ரன், விக்ரமுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

விஜய் ரசிகர்கள்

தளபதி விஜய்க்கு நிகராக விஜய் ரசிகர்கள் சியான் விக்ரமையும் கொண்டாடி வருகின்றனர். #HBDChiyaanFromThalapathyFans என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி விஜய் ரசிகர்கள் விக்ரம் பிறந்தநாளை தனியாக கொண்டாடி டிரெண்ட் செய்து வருகின்றனர். விக்ரம் மற்றும் விஜய் இணைந்திருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

மல்டிபிள் பெர்சனாலிட்டி

அந்நியன் படத்தில் மல்டிபிள் பெர்சனாலிட்டி கொண்ட ஆளாக சியான் விக்ரம் அம்பி, ரெமோ மற்றும் அந்நியனாக நடித்திருப்பார். நிஜ வாழ்விலும் சியான் விக்ரம் மல்டிபிள் பெர்சனாலிட்டி தான் போல, சேது, பிதாமகன், தெய்வத்திருமகள், அந்நியன், இருமுகன், கந்தசாமி, ராவணன், ஐ, காசி என பல பெர்சனாலிட்டிகளாக விக்ரம் வாழ்ந்து இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X