ராயல் ராம்சரணுக்கு ஹேப்பி பர்த்டே.. மன்னிப்புக் கேட்ட ஜூனியர் என்.டி.ஆர்., டிரெண்டாகும் ஹாஷ்டேக்!

ஹைதராபாத்: மகதீரா, ரங்கஸ்தலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்திய நடிகர் ராம்சரண் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Recommended Video

Ram Charan Teja 35th Birthday | Jn NTR | RRR | SS Rajamouli

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகருமான ராம்சரண், இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு, #HBDRoyalRAMCHARAN என்ற ஹாஷ்டேக்கை ஒரு மில்லியன் ட்வீட்டுக்கு மேல் போட்டு அவரது ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

சென்னை பையன்

சென்னை பையன்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம்சரண், மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் சுரேகா தம்பதியினருக்கு 1985ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி சென்னையில் பிறந்தார். தனது ஆரம்ப பள்ளியை சென்னையில் படித்த ராம்சரண், உயர்நிலை கல்வியை ஊட்டியில் படித்துள்ளார். சென்னைக்கும், ராம்சரணுக்கும் இப்படியொரு நெருக்கமான பந்தம் இருக்கிறது.

ராஜமவுலி ஃபேவரைட்

ராஜமவுலி ஃபேவரைட்

பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமவுலியின் ஃபேவரைட் நடிகரான ராம்சரண், 2009ம் ஆண்டு வெளியான மகதீரா படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தியிருந்தார். ராஜமவுலிக்கு பாகுபலி படம் பண்ண பயிற்சி படமாக மகதீரா இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ராஜமவுலி இயக்கி வரும் இரத்தம், ரணம், ரெளத்திரம் படத்திலும் லீடு ரோலில் ராம்சரண் நடித்து வருகிறார்.

ரங்கஸ்தலம்

ரங்கஸ்தலம்

சுகுமார் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான ரங்கஸ்தலம் திரைப்படத்தில் காது கேளாத இளைஞராக நடிப்பில் பின்னி எடுத்திருப்பார் ராம்சரண். சமந்தா, ஆதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதினையும் ராம்சரண் தட்டிச் சென்றார். தமிழில் ரங்கஸ்த்தலம் படத்தை ராகவா லாரன்ஸ் ரீமேக் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

70 லட்சம்

70 லட்சம்

தனது சித்தப்பா பவன் கல்யாண் கொரோனா நிவாரண நிதியாக 2 கோடி ரூபாய் கொடுத்துள்ள நிலையில், அதை இன்ஸ்பயராகக் கொண்டு நடிகர் ராம்சரண் 70 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதியை ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு பிரித்து வழங்கி உள்ளார்.

அல்லு அர்ஜுன் ரசிகர்கள்

தெலுங்கு திரையுலகின் வசூல் மன்னனான ராம்சரணின் 35வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வாழ்த்துக்களை கொட்டி வருகின்றனர். அல்லு அர்ஜுன் ரசிகர்களும், தங்கள் வாழ்த்துக்களை ராம்சரணுக்கு தெரிவித்து வருகின்றனர்.

மன்னிப்பு கேட்ட ஜூனியர்

பாகுபலி இயக்குநர் ராஜமவுலியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான இரத்தம் ரணம் ரெளத்திரம் படத்தில் ராம்சரண் உடன் இணைந்து ஜூனியர் என்.டி.ஆரும் நடித்து வருகிறார். ராம்சரணுக்கு நேற்று இரவே பிறந்தநாள் பரிசை ராஜமவுலியிடம் கொடுத்ததாகவும், ராஜமவுலியாக இருப்பதால், பிறந்தநாள் பரிசு வர தாமதம் ஆகிவிட்டது, மன்னித்து விடு ராம்சரண் என ஜூனியர் என்.டி.ஆர் போட்ட பதிவும் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X