ஒரே பாட்ஷா.. ஒரே சூப்பர் ஸ்டார்.. ஒன் அண்ட் ஒன்லி ரஜினிகாந்த்.. தெறிக்கும் #HBDSuperstarRajinikanth
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆரம்பித்து விட்டனர்.
#HBDSuperstarRajinikanth என்றும் #Thalaiva என்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.
சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஸ்பெஷல் காமன் டிபிக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் பிறந்தநாள்
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சிறந்த உதாரணமாக சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் கண்டக்டர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக 40 ஆண்டுளுக்கும் மேலாக கோலோச்சி வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் களைகட்டி உள்ளது.

ஒன்லி ஒன்
தமிழ் சினிமாவில் ஒரே பாட்ஷா, ஒரே சூப்பர் ஸ்டார், ஒன் அண்ட் ஒன்லி ரஜினிகாந்த் என ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி கொண்டாடி வருகின்றனர். 70 வயதிலும் அண்ணாத்த ரஜினியாக ஃபுல் எனர்ஜி உடன் சூப்பர் ஸ்டார் நடித்து இருப்பதை பார்க்கவே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்து சென்றனர்.

வசூல் மன்னன்
கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக கலக்கி வருகிறார் ரஜினிகாந்த். 100 கோடி கிளப், மெகா பிளாக்பஸ்டர், அதிக வசூல் ஈட்டிய தமிழ் சினிமா என மற்ற நடிகர்கள் போட்டி போட்டுக் கொள்ள விதை விதைத்ததே இந்த படையப்பா போட்ட தனி வழி தான் காரணம்.

குவியும் வாழ்த்துக்கள்
இந்திய சினிமாவின் இணையற்ற சூப்பர் ஸ்டாராக பாலிவுட் நட்சத்திரங்களே கொண்டாடும் வகையில் அனைவரையும் அதிசயிக்க வைத்து வரும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு #HBDSuperstarRajinikanth உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளை போட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

காமன் டிபி
பில்லா, முத்து, சிவாஜி, எந்திரன், பேட்ட என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மெகா பிளாக்பஸ்டர் படங்களின் தொகுப்போடு ஒரு பிறந்தநாள் காமன் டிபியும் எப்பவுமே கோலிவுட்டின் பாட்ஷா ரஜினிகாந்த் தான் என படு மாஸான எடிட் உடன் ஒரு காமன் டிபியும் என இரண்டு ஸ்பெஷல் காமன் டிபிக்களை நடிகை சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிட்டு வாழ்த்து கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











