திமிர் பிடிச்சவன்னு திட்டியவர்களே புகழும்படி செய்த அஜித் #HBDThalaAJITH

By Siva

சென்னை: திமிர் பிடித்தவர் என்று பெயர் வாங்கிய அஜித் இன்று அடக்கமானவர், அன்பானவர் என்று அழைக்கப்படுகிறார்.

கோலிவுட்டில் அஜித் பெயரை சொன்னாலே அவரா சான்ஸே இல்ல, என்ன மனுஷன் தெரியுமா. அவ்வளவு அன்பானவர், அடக்கமானவர் என்பார்கள். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே அஜித்தை தலைக்கனம் பிடித்தவர், திமிர் பிடித்தவர் என்று திட்டினார்கள்.

அஜித் பேட்டி கொடுத்தாலே பலரும் முகம் சுளித்தார்கள்.

உண்மை

உண்மை

அஜித் மனதில் பட்டத்தை பளிச்சென்று பேசிவிடுவார். அப்படி பேசுவதால் அவரை ஒரு காலத்தில் திமிர் பிடித்தவர் என்றார்கள். முன்பு எல்லாம் அவர் பேட்டி கொடுத்தாலே அனல் பறக்கும். அதன் பிறகு அவர் மீடியாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

மேடை

மேடை

அரசியலில் இருந்து தள்ளியே இருப்பவர் அஜித். தன்னை கட்டாயப்படுத்தி அழைத்து வந்தார்கள் என்று தமிழக முதல்வர் கலந்து கொண்ட விழா மேடையில் துணிச்சலாக கூறியவர் அஜித். அதை கேட்டு அங்கிருந்தவர்கள் எல்லாம் ஆடிப் போக ரஜினியோ தில்லாக எழுந்து நின்று கை தட்டினார்.

அன்பு

அன்பு

கோபக்காரராக இருந்த அஜித் அப்படியே ஆளே மாறிவிட்டார். தனது பெயரை ரசிகர்கள் தவறாக பயன்படுத்தியதை அறிந்த அவர் எந்த நடிகரும் செய்யத் தயங்கும் விஷயத்தை செய்தார். அதாவது ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டார். அதன் பிறகு அவர் கெரியர் அவ்வளவு தான் என்று பலரும் கூறினார்கள். ஆனால் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸ் கிங்காகத் தான் உள்ளார்.

படம்

படம்

சினிமாவை பொழுதுபோக்காக மட்டும் பாருங்கள். குடும்பம் தான் முக்கியம் என்று ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியவர் அஜித். என்னை அப்புறம் கொண்டாடலாம் முதலில் குடும்பத்தை கொண்டாடுங்க என்று கூறிய அவரை ரசிகர்கள் இன்றும் கொண்டாடிக் கொண்டு தான் உள்ளனர். ரசிகர் மன்றங்கள் இல்லாவிட்டாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்களுக்கு குறைவு இல்லை.

உதவும் குணம்

உதவும் குணம்

அஜித் அநியாயத்திற்கு அமைதியாகவும், பவ்யமாகவும் ஆகிவிட்டார். படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்கள் மட்டும் அல்ல டெக்னீஷியன்கள் முதல் அனைவரையும் சமமாக நடத்துபவர், மதிப்பவர். உதவி என்று கேட்டு வந்தால் வெறும் கையுடன் அனுப்பி வைக்காதவர். தான் செய்யும் உதவியை வெளியே சொல்லக் கூடாது என்று அன்புக்கட்டளை போடுபவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X