இதான் என் பிறவிக் குணம்..! - விஜய்
சத்தமே இல்லாமல் பிறருக்கு உதவுவதுதான் எனது பிறவிக் குணம் என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.
சமீபத்தில் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என ஒரு வாரப் பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்தப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தொடர்ந்து சத்தமே இல்லாமல் மக்களுக்கு உதவி செய்து வரும் நீங்கள், எதிர்காலத்தில் என்ன செய்ய ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்டுள்ளனர்.

பிறவிக் குணம்
அதற்கு விஜய் அளித்த பதிலில், "சத்தமே இல்லாமல் உதவி செய்கிறேன் என்று உங்கள் கேள்வியிலேயே பதில் சொல்லிட்டீர்களே... அதுதான் எனது பிறவிக்குணம். எதிர்காலத்தில் என்ன செய்வீர்கள் என்று கேட்டால், இதேபோன்று உதவியை பல மடங்கு செய்ய வேண்டும் என்பதுதான்!'' என்று பதிலளித்துள்ளார்.

ரசிகர்களுக்கு...
பிறந்த நாளையொட்டி ரசிகர்களுக்கு சொல்ல விரும்பும் செய்தி என்ன என்ற கேள்விக்கு, "என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கு வணக்கம். வழக்கமாக நான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. அன்றைய தினம் ஏழைகளுக்கு உதவும் தினமாக அறிவித்திருக்கிறேன்.

பெருமை
நீங்களும் ஒரு படி மேலே போய் அந்தந்த ஏரியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம், கண்தானம், ரத்ததானம், மாணவர்களுக்கு லேப்-டாப், பெண்களுக்கு தையல்மிஷின், ஏழைகளுக்கு அன்னதானம் என உங்களால் இயன்றதைச் செய்து வருகிறீர்கள். உங்களது இந்த செயல்பாடுகள் எனக்கு சந்தோஷமாகவும், அதே நேரம் பெருமையாகவும் இருக்கிறது.

உயரணும்
உங்களது இந்த சமூகத் தொண்டு மேலும் பல மடங்காக உயர வேண்டும். அதற்கு நீங்கள் பொருளாதார நிலையில் உயர்ந்தால் மட்டுமே முடியும். நீங்கள் எந்தத் தொழில் செய்தாலும் சரி, அதில் உறுதியோடும், உண்மையோடும், உழையுங்கள். கண்டிப்பாக வெற்றியைப் பெறுவீர்கள்.

உழையுங்கள்
உங்கடைய ஒவ்வொருவரின் வியர்வைக்கும் விலையுண்டு. நீங்கள் வெற்றி பெற்றால் நான் வெற்றி பெறுவது போல். ஆகவே உண்மையோடு உழையுங்கள். உயர்ந்த இடத்தைப் பிடியுங்கள். இதுவே உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கும் என் பிறந்தநாள் பரிசாகும்," என்று பதில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











