280 கோடிலாம் இல்லை பாஸ்.. கூலிக்கு ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. லோகேஷும் பின்னுறாரே
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். ஆகஸ்ட் 14ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் மீது ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில்; மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி மேற்கொண்டு அதனை அதிகரித்திருக்கிறது. கண்டிப்பாக பந்தயம் அடிக்கும் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ரஜினி, லோகேஷ் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி மெகா ஹிட் கொடுத்த கையோடு ரஜினிகாந்த்துடன் லோகேஷ் கனகராஜ் இணைவார் என்று பேசப்பட்டது. ரஜினியும் லோகேஷை நேரில் அழைத்து அந்தப் படத்தை பற்றி பாராட்டியிருந்தார். சூழல் இப்படி இருக்க இரண்டு பேரும் இணையாமல் இருந்தார்கள். ஒருவழியாக கூலி படத்தில் அவர்கள் இணைந்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
அத்தனை நடிகர்கள்: இந்தப் படத்தில் ரஜினியுடன் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர் கான், ஸ்ருதிஹாசன், அபிராமி என பலர் நடிக்கிறார்கள். இதில் சத்யராஜ் மட்டும்தான் ரஜினிகாந்த்துடன் ஏற்கனவே நடித்திருக்கிறார். மற்றவர்கள் எல்லாம் முதன்முறையாக அவருடன் நடிக்கிறார்கள். எனவே அவர்களுடனான கெமிஸ்ட்ரி ரஜினிக்கு எப்படி இருக்கும் என்பது குறித்தும்; சத்யராஜ் நடிப்பில் எந்தவிதமான பெர்பார்மன்ஸை கொடுக்கப்போகிறார் என்பது குறித்தும் ஆவல் அதிகரித்திருக்கிறது.

லோகேஷும் ஸ்பெஷல்தான்: அதேபோல் இந்திய அளவில் இப்போது டாப் 10 இயக்குநர்களுக்குள் லோகேஷ் கனகராஜும் இருக்கிறார். அவர் இயக்கிய மாநகரம் முதல் விக்ரம்வரை அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. ஆனால் விஜய்யை வைத்து அவர் கடைசியாக இயக்கியிருந்த லியோ படம் மட்டும்தான் சுமார் ரகத்தில் சேர்ந்தது. முக்கியமாக கடுமையான ட்ரோலையும் விமர்சனத்தையும் சந்தித்தது. இதன் காரணமாக தன்னை விமர்சித்தவர்களுக்கு கூலி படத்தின் மூலம் செம கூலி கொடுக்க காத்திருக்கிறார் அவர்.
என்ன எதிர்பார்ப்பு?: இதையெல்லாம் தாண்டி ரஜினிகாந்த்துடன் முதன்முறையாக சேர்ந்திருக்கிறார் லோகேஷ். அவர் கமல்ஹாசனின் வெறித்தனமான ரசிகர் என்றாலும் ரஜினியையும் அவர் ரசித்து வந்திருக்கிறார். தனக்கு ரஜினி நடித்த கேரக்டர்களிலேயே தளபதி படத்தில் அவர் ஏற்றிருந்த தேவா கதாபாத்திரம் ரொம்ப பிடிக்கும் என தெரிவித்திருக்கிறார். இந்தப் படத்திலும் ரஜினி ஏற்றிருக்கும் கேரக்டரின் பெயர் தேவா என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கண்டிப்பாக ஃபேன் பாய் சம்பவம் இருக்கும் என இரண்டு பேரின் ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
மேக்கிங் வீடியோ: படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடக்க ஆரம்பித்திருக்கின்றன. ஆகஸ்ட் 14ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க சமீபத்தில்தான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது. ஒவ்வொரு ஷாட்டிலும் ரஜினிகாந்த்தை லோகேஷ் பயன்படுத்தியிருக்கும் விதத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு படத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை பிறந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பளம் எவ்வளவு?: இந்நிலையில் கூலி படத்துக்காக ரஜினியும் லோகேஷ் கனகராஜும் வாங்கியிருப்பதாக ஒரு சம்பள தொகை கூறப்படுகிறது. அதாவது இப்படத்தில் ரஜினிகாந்த் 150 கோடி ரூபாயும், லோகேஷ் 50 கோடி ரூபாயும் சம்பளம் வாங்கியிருக்கிறார்கள் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ரஜினி 150 கோடி ஓகே; ஆனால் இந்த இளம் வயதில் 50 கோடி ரூபாய் பெறும் இயக்குநராக லோகி மாறிவிட்டாரே என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











