சிவகார்த்திகேயனின் மதராஸி.. கதை இதுதானா?.. இதுக்கு இவ்வளவு ஹைப்பா?.. கேள்வி கேட்கும் ரசிகர்கள்

சென்னை: சிவகார்த்தியேன் நடித்த அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு; அவர் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்திருக்கிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்துவருகிறார். மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் கதை குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்த வெற்றி அவரது சம்பளத்தையும், மார்க்கெட்டையும் உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது. முக்கியமாக கோலிவுட்டின் டாப் 5 கமர்ஷியல் ஹீரோக்கள் என்ற லிஸ்ட்டில் அவரை இணைத்தது. இதன் காரணமாக எஸ்கேவுக்கு திரைத்துறையில் தனி சிம்மாசனம் போடப்பட்டுவிட்டதாகவும் அவரின் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

அடுத்த படங்கள்: அமரன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடிக்க கமிட்டானார் எஸ்கே. முருகதாஸும் கடந்த சில வருடங்களாகவே ஹிட் படம் கொடுக்க முடியாமல் திணறிவருகிறார். சல்மான் கானை வைத்து அவர் கடைசியாக இயக்கிய சிக்கந்தர் படமும் இயக்குநருக்கு சிக்கலைத்தான் உண்டு செய்தது. எனவே மதராஸி படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க அவர் காத்திருக்கிறார்.

Here are Details about Sivakarthikeyan s Madharasi Movie Story
Photo Credit:

நான்காவது வெற்றி கிடைக்குமா?: எஸ்கேவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியானது. அந்த டீசர் ரசிகர்களிடையே ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றது. எது எப்படி இருந்தாலும் மாவீரன், அயலான், அமரன் வரிசையில் தொடர்ச்சியான நான்காவது வெற்றி படமாக இந்தப் படம் அமைந்துவிடம வேண்டும் என்பது ரசிகர்களின் ஆவல்.

முதல் சிங்கிள்: படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே எஸ்கே - அனிருத் காம்போ ஹிட்டாகியிருப்பதால் இந்தப் படத்தின் பாடல்கள் மீது அதீத எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனை நிறைவேற்றும் விதமாகத்தான் முதல் பாடலான சலம்பலா அமைந்திருந்தது. குறிப்பாக அந்தப் பாடலில் சிவகார்த்திகேயனின் நடனத்துக்கு ரசிகர்கள் தங்களது ஏகோபித்த ஆதரவை தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன கதை?: இந்நிலையில் மதராஸி படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, இந்தக் கதை காதல் கதைதானாம். தமிழ்நாட்டில் பணியாற்றும் ஒரு படக்குழுவுக்கும், வட இந்திய மாஃபியா கும்பல் ஒன்றுக்கும் இடையே நடக்கும் மோதலில் இந்தக் காதலின் பங்கு என்ன?.. மேலும் பழிவாங்கல்கள், தியாகங்கள் உள்ளிட்டவைகளை இணைத்து இந்தக் கதையை முருகதாஸ் இயக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ரசிகர்களோ இந்தக் கதைக்குதான் இவ்வளவு ஹைப்பா என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். படமானது அடுத்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X