தனுஷின் குபேரா எப்படி இருக்கிறது?.. ஹிட் கன்ஃபார்ம்தான் போல.. இதோ முதல் விமர்சனம்

சென்னை: சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் குபேரா திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் அவருடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார். இதற்கு முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான ராயன், கேப்டன் மில்லர் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியை சந்தித்தன. இதன் காரணமாக இப்படத்தின் மீது அவரது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்திய திரைத்துறையில் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றிருப்பவர் தனுஷ். வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருந்த அவருக்கு இடையில் சின்ன சறுக்கல் ஏற்பட்டது. அந்த சறுக்கலை திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் சரிப்படுத்திக்கொண்டார். ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு அவர் நடித்த வாத்தி, கேப்டன் மில்லர், ராயன் ஆகிய மூன்று படங்களுமே அவர் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு பெற்று தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராயன் மீது பெரிய நம்பிக்கை: அந்த மூன்று படங்களில் ராயன் படத்தின் மீது உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருந்தார்கள் அவரும் அவரது ரசிகர்களும். ஏனெனில் அந்தப் படம் அவருக்கு ஐம்பதாவது படம் மற்றும் அதனை தனுஷே இயக்கவும் செய்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெறியை பெறவில்லை. வடசென்னை, வானத்தைப் போல போன்ற படங்களின் கலவைதான் அந்தப் படம் என்று ரசிகர்கள் கூறினார்கள். மேலும் ட்ரோலும் செய்ய ஆரம்பித்தார்கள்.

Here are Dhanush s Kubera Movie First Review

இயக்கத்திலும் சறுக்கல்தான்: நடித்த படம்தான் அப்படி போய்விட்டது; அவர் இயக்கிய படமான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படமாவது தனுஷுகு பெயரை பெற்று தரும் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகியிருந்த அந்தப் படம்; டிராகன் படத்துக்கு போட்டியாக களமிறங்கியது. ஆனால் டிராகன் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி NEEK படத்தை ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிட்டது.

குபேரா தனுஷ்: இதற்கிடையே தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடிக்க கமிட்டானார் தனுஷ். ஏற்கனவே வெங்கி அட்லூரியுடன் இணைந்து வாத்தி படத்தில் சூடு போட்டுக்கொண்டதால்; மீண்டும் ஏன் தெலுங்கு இயக்குநருடன் அவர் இணைகிறார் என்று அவரின் ஃபேன்ஸ் ரொம்பவே சோகமடைந்தார்கள். அதேசமயம் டோலிவுட்டை பொறுத்தவரை சேகர் கம்முல்லா நல்ல இயக்குநர் என்ற பெயரை பெற்றிருக்கிறார். எனவே கண்டிப்பாக இப்படம் சொதப்பாது என்ற அதிக நம்பிக்கை பிறந்திருக்கிறது தனுஷ் ரசிகர்களிடம்.

வெளியான டீசர்: இதில் தனுஷுடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகளவு தூண்டியிருந்தது. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு படத்தின் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. படமானது ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் திரைத்துறையை சேர்ந்த சிலர் குபேரா படத்தை பார்த்திருக்கிறார்கள்.

முதல் விமர்சனம்: அப்படி பார்த்தவர்களில் ஒருவர் படம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "சேகர் கம்முல்லாவின் குபேரா படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர்களின் நடிப்பு, இயக்குநர் அமைத்திருக்கும் திரைக்கதை என அனைத்தும் ஃபவர்ஃபுல்லாக இருக்கின்றன. இந்தப் படம் தனுஷுக்கு இன்னொரு ப்ளாக் பஸ்டர். நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா அட்டகாசமாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை தியேட்டரில் ஒவ்வொருவரும் பார்த்து ஹிட்டாக்குவதற்காக காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். படம் பார்த்தவரின் முதல் விமர்சனம் இவ்வளவு பாசிட்டிவ்வாக வந்திருப்பதால் தனுஷ் ரசிகர்கள் ஹேப்பியாகியிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X