கூலி ஷூட்டிங்.. இப்போதைய நிலைமை என்ன?.. ஓபனாக பேசிய ரஜினிகாந்த்

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற சூழலில் கூலி படத்தை அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்கள். முக்கியமாக லோகேஷின் படம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்கிற நம்பிக்கையிலும் இருக்கிறார்கள் அவர். இந்தச் சூழலில் கூலி படத்தின் ஷூட்டிங் குறித்து ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.

ரஜினிகாந்த்துக்கு ஜெயிலர் படத்துக்கு முன்பாக வெளியான அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன. இதனால் அவரது சாம்ராஜ்ஜியம் சாய்ந்துவிட்டதாக சொல்லப்பட்ட சூழலில்; ஜெயிலர் படம் அந்தப் பேச்சை மாற்றி வைத்தது. அப்படம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அடுத்ததாக அவர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் எதிர்பார்ப்போடு வெளியானாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

coolie rajinikanth

கூலி கூட்டணி: வேட்டையன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் கமிட்டானார் அவர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கிறது. இதில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

லோகேஷுக்கும் முக்கியமான படம்: அதேபோல் லோகேஷ் கனகராஜுக்கும் இந்தப் படம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர் இயக்கிய படங்களில் லியோ திரைப்படம்தான் மோசமான விமர்சனத்தை பெற்றது. இதன் காரணமாக அந்தப் பெயரை கூலி படத்தில் மாற்ற வேண்டுமென்ற முனைப்பில் உழைத்துவருகிறார் அவர். இதற்காக ஒவ்வொரு சீனையும் பார்த்து பார்த்து அவர் செதுக்கியிருப்பதாகவும்; கமல் ஹாசனுக்கு கொடுத்ததுபோல் ரஜினிக்கும் மெகா ஹிட்டாக கொடுக்க வேண்டுமென்றும் அவர் நினைப்பதாகவும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.

சூப்பர் ட்ரீட்: சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் டிசம்பர் மாதம் படத்தில் இடம்பெற்றிருக்கும் Chikitu Vibe பாடலின் க்ளிம்ப்ஸ் வெளியானது. அதில் ரஜினிகாந்த் நடனத்தில் பட்டையை கிளப்பியிருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இதில் தங்களுக்கு சூப்பர் ட்ரீட் இருப்பது உறுதியாகியிருப்பதாக உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்தனர்.

விறுவிறு ஷூட்டிங்: இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "கூலி படத்தின் ஷூட்டிங் 70 விழுக்காடு நிறைவடைந்திருக்கிறது. இந்த மாதம் 13ஆம் தேதி முதல் 28ஆம் தேதிவரை படத்தின் ஷூட்டிங் இருக்கிறது" என்று கூறிவிட்டு தாய்லாந்துக்கு புறப்பட்டு சென்றார். அங்குதான் தற்போது கூலி ஷூட்டிங் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X