வெங்கட் பிரபுவுக்கு கல்தா கொடுத்துவிட்டாரா சிவகார்த்திகேயன்?.. தீயாய் பரவும் தகவல்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் மெகா ஹிட்டானது. அந்தப் படத்துக்கு முன்னதாகவே வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் விஜய்யை வைத்து வெங்கட் GOAT படத்தை இயக்க சென்றுவிட்டதால் சிவா அமரனுக்கு வந்தார். சூழல் இப்படி இருக்க இரண்டு பேரும் இணையும் படம் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிகமாகவே எழுந்திருக்கிறது.
கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்கள் வரிசைக்குள் வந்துவிட்டார் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம்தான் அந்த இடத்தை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. மிகப்பெரிய ஹிட்டடித்த அந்தப் படம் உலகளவில் 350 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் அந்தப் படம் கொண்டாடப்பட்டது. முக்கியமாக சிவகார்த்திகேயனின் பாடி லாங்குவேஜும், நடிப்பும் வேறு ஒரு பரிமாணத்தில் இருந்ததாக கூறினார்கள் ரசிகர்கள்.

அடுத்த படம்: அமரன் படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனின் சம்பளத்தை உயர்த்தி வைத்திருக்கிறது. அதன்படி 50 கோடி ரூபாய்வரை அவர் சம்பளமாக வாங்குகிறார் என்றும் சொல்லப்படுகிறது. அமரன் படத்தில் நடித்து முடித்த அவர்; அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதனையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்திலும் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்புதான் நடந்தது.
சிபி சக்கரவர்த்தியுடன் படம்: ஏ.ஆர்.முருகதாஸ், சுதா கொங்கரா இயக்கத்தில் படங்களில் நடிக்கும் அவர்; டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடனும் ஒரு படத்தில் கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் ஷூட்டிங் இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பது தெரியவில்லை. இருப்பினும் அந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்றும்; கண்டிப்பாக இந்தப் படமும் மெகா ஹிட்டடித்து டான் படம் மாதிரி நூறு கோடி க்ளப்பில் இணையும் என்றும் எஸ்கே ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
வெங்கட் பிரபு கூட்டணி: இதற்கிடையே இந்தப் படங்களுக்கெல்லாம் முன்னதாகவே வெங்கட் பிரபு இயக்கத்தில்தான் நடிக்க கமிட்டானார் சிவா. ஆனால் அந்த சமயத்தில் விஜய்யை வைத்து வெங்கட்டுக்கு GOAT படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததால் அந்தப் படத்தை இயக்குவதற்கு சென்றுவிட்டார். எஸ்கேவும் அமரன் படத்தில் பிஸியாகிவிட்டார். அடுத்ததாக சுதா படத்தில் பிஸியாகியிருக்கிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
என்ன தகவல்?: அதன்படி கண்டிப்பாக இந்தப் படத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதில் வெங்கட் பிரபுவும் உறுதியாக இருக்கிறாராம். அநேகமாக சுதா கொங்கரவுடனான படம், சிபி சக்கரவர்த்தியுடனான படத்தை முடித்துவிட்டு வெங்கட் படத்துக்கு எஸ்கே செல்வார் என்றும்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும்; இருவரும் இணையும் படம் ட்ராப்பெல்லாம் ஆகவில்லை என்று திரைத்துறையில் பேச்சுக்கள் பலமாகவே எழுந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











