கார்த்தியின் 29வது படம் இன்னமும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது!

சென்னை: கார்த்தியின் நடிப்பில் கடைசியாக வெளியான மெய்யழகன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து அவருக்கும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. நலன் குமாரசாமி இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் வா வாத்தியார் படம் சில பிரச்னைகளால் இன்னும் ரிலீஸாகாமல் இருக்கிறது. இந்தச் சூழலில் டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

நடிகரும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டாக கார்த்தியின் நடிப்பும் அனைவரையும் பிரமிக்க வைத்தது. இதனையடுத்து அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்தன. குறிப்பாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து தன்னை ஒரு நல்ல நடிகராக நிலைப்படுத்திக்கொண்டார்.

வந்தியத்தேவன்: குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதில் அவர் ஏற்றிருந்த வந்தியத்தேவன் கதாபாத்திரம்தான் அந்தப் படத்தில் மற்றவர்கள் ஏற்றிருந்த கதாபாத்திரத்தைவிட பரவலாக பேசப்பட்டது. அதற்கு காரணம் கார்த்தி அந்தக் கதாபாத்திரத்திற்கு கொடுத்திருந்த அட்டகாசமான உழைப்புதான்.

Here are New Information about Karthi 29 Movie
Photo Credit:

மெய்யழகன்: கடைசியாக அவர் மெய்யழகன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் அவருடன் அரவிந்த் சாமி, தேவதர்ஷினி, ஸ்ரீதிவ்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முக்கியமாக கார்த்தியின் நடிப்பை பார்த்த பலரும் புல்லரித்து போனார்கள். முக்கியமாக தமிழில் வந்த மிகச்சிறந்த ஃபீல் குட் படங்களில் ஒன்று என்ற பெயரையும் பெற்றது. அதுமட்டுமின்றி இதுமாதிரியான கதையில் நடித்ததற்காக கார்த்தியை அனைவருமே பாராட்டினார்கள்.

பிரம்மாண்டமாக உருவாகிறது: இந்நிலையில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. ராமேஸ்வரம் - இலங்கை கடற்பகுதியில் வாழ்ந்த கடற்கொள்ளையர்கள் பற்றிய படமாக இந்த படம் உருவாகவுள்ளதாகவும், 2 பாகங்களாக உருவாக்கும் திட்டமும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கார்த்தி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 படத்திலும் நடிக்கவுள்ளார். சர்தார் 2 அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X